அவதூறு வழக்கில் 23 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பரவலாக அறியப்பட்ட சமூக செயல்பாட்டாளர் மேதா பாட்கர்(69) மீது தில்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா தொடர்ந்த அவதூறு வழக்கில் திங்கள்கிழமை(ஜூலை 1) தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தேசிய குடிமையியல் விடுதலைகள் சங்கத்தின் அப்போதைய தலைவராக பதவி வகித்த வி.கே. சக்சேனா, தனது பெயரைக் களங்கப்படுத்தும் விதத்தில் நவம்பர் 5, 2000இல், பத்திரிகை ஒன்றில் ”தேசபக்தரின் உண்மை முகம்” என்ற பெயரில் தவறான உள்ளீடுகளை இணைத்து, பாட்கர் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து, பாட்கருக்கு எதிராக அவதூறு வழக்கை தொடுத்தார் சக்சேனா.
இந்த வழக்கில் சமூக செயல்பாட்டாளர் மேதா பாட்கருக்கு 5 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அபராதமாக ரூ. 10 லட்சம் தொகை செலுத்தவும் தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

