[ad_1]
Last Updated:
உத்தரப்பிரதேசம் செக்டார் 20-ல் 30 வயது பெண் தற்கொலை முயற்சி வீடியோவை 20 நிமிடங்களில் கண்டுபிடித்து காவல்துறை உயிரைக் காப்பாற்றியது.
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தான் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும், தனது வாழ்வை முடித்துக்கொள்ளப் போவதாகவும் சமூக வலைதளத்தில் காலை 8 மணிக்கு வீடியோ பதிவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.
அப்படிப் பரவிய வீடியோ அடுத்த 20 நிமிடங்களில் அதாவது காலை 8.20-க்கு உ.பி. காவல்துறையின் கவனத்திற்கு வந்துள்ளது. உடனே காவல்துறையினர் அந்த வீடியோ பகிரப்பட்ட தொலைப்பேசியின் ஐ.பி. முகவரியைக் கண்டறிந்துள்ளனர். அப்போது அது செக்டார் 20-ல் இருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பது தெரியவந்தது.
இதனை அடுத்து காவல்துறையினர் உடனடியாக செக்டார் 20 காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்தத் தகவலின் அடிப்படையில், செக்டார் 20 காவல் நிலைய காவல்துறையினர் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு விரைந்து சென்றுள்ளனர்.
அங்கு 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அதனைக் கண்ட காவல்துறையினர் உடனடியாக அந்தப் பெண்ணைத் தடுத்து நிறுத்தினர். மேலும், அவர் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தற்போது அந்த இளம் பெண் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாகவும், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையைக் கடந்துவிட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அவருக்கு மனநல ஆலோசகர் மூலம் ஆலோசனை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள செக்டார் 20 காவல்துறை அதிகாரி ஒருவர், “30 வயது கொண்ட பெண் ஒருவர், இந்த விபரீத முடிவை எடுக்கத் துணிந்துள்ளார். அவருக்கு கடந்த 2020-ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. ஆனால், சமீப மாதங்களாக அவர் தனியாக வாழ்ந்துவருவதாகத் தெரிகிறது. இதுவும் கூட அவரது மன உளைச்சலுக்கும், இந்த விபரீத முடிவுக்கும் காரணமாக இருக்கலாம். விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவிலே உண்மைக் காரணம் தெரியவரும்” எனத் தெரிவித்துள்ளார்.
September 07, 2025 3:56 PM IST