நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நிலையியல் கட்டளைகள் தொடர்பில் எழுப்பிய கேள்வி குறித்து சபையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது நிலையியல் கட்டளைகள் குறித்த கேள்வியை எழுப்ப இருந்த சந்தர்ப்பத்தில் அர்ச்சுனா இராமநாதன் சபாநாயகரை நோக்கி, ”வினாவை கேட்ப்பதற்கு முன்னதாக அதற்கு தடை ஏற்படுத்தியுள்ளீர்கள்” என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இதற்கு பதில் வழங்கிய சபாநாயகர், முட்டாள் தனமாக நாடாளுமன்றில் நடந்துகொள்ள வேண்டாம் என கூறினார்.
எதிர்க்கட்சி தலைவர் எதிர்ப்பு
மேலும் நாடாளுமன்றை ஒரு விளையாட்டு தனமாக மாற்ற முயற்சிக்க வேண்டாம் எனவும் எச்சரித்திருந்தார்.

இதன்போது சபாநாயகரின் கருத்துக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
”நிலையியல் கட்டளைகளின்படி எந்த ஒரு உறுப்பினருக்கும் மோசமான முறையில் தகாத வார்த்தைகளால் குற்றம் சாட்ட முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
முட்டாள் தனமாக உரையாற்றவேண்டாம் என நீங்கள் கூறிய விடயம் பொருத்தமற்றதாக பார்க்கப்படுகிறது.
சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்துள்ள நீங்கள் நிலையியல் கட்டளைக்கு ஏற்ப செயற்படுங்கள். கேள்விகளை எழுப்புவதற்கு சந்தர்ப்பத்தை வழங்குங்கள்.
இந்த உயரிய சபையில் உள்ள ஒருவருக்கு முட்டாள்தனம் என்று கூற வேண்டாம். அது பொருத்தமற்றது” என சஜித் பிரேமதாச கூறியிருந்தார்.
பிமல் ரத்னாயக்கவும் கருத்து
இதன்போது கருத்து தெரிவித்த சபை முதல்வர் பிமல் ரத்னாயக்கவும் தனது கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

”சபாநாயகரே இந்த சபையில் அனைத்து உறுப்பினர்களும் நிலையியல் கட்டளைக்கு அமைவாகவே செயற்படுகின்றனர். இதுவரைகாலமும் நாடாளுமன்றில் மிகவும் மோசமாக அர்ச்சுனவைபோல எவரும் நேரத்தை வீணடித்து செயற்படவில்லை.
உளநோயாளர்கள் போலவே இவர்கள் நடந்துகொள்கின்றனர்.
ஒலிவாங்கியுளும் காணொளிகளிலும் இவர்களில் செயற்பாட்டை பார்க்காமல் இருக்கலாம். ஆனால் இந்த நான்கு சுவர்களுக்குள் இருப்பவர்கள் அனைவரும் சாட்சியாளர்கள்.
இவரின் செயற்பாடு ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் ஏளனமாக மற்றும் செயற்பாடு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவரின் அருகில் அமரமுடியாது என கடிதம் சமர்ப்பித்துள்ளார்.யாழில் இவரால் ஒரு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை கூட நடத்தமுடியவில்லை.
எனவே நாங்கள் ஏன் பொறுமையாக இருக்கின்றோம் என்றால், அவர் ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவராக இருந்தால் சிகிச்சை பெற்றால் சரிவரும் என கருதுகின்றோம்.
இங்கு பார்க்கும்போது அவர் ஒரு சபாநாயகரை எப்படி அழைக்கின்றார்?
கடந்தகாலங்களில் அரசியல் ரீதியாக முரண்பட்டுக்கொண்டாலும் தனிப்பட்டரீதியில் எவரும் சபாநாயகரை தாக்கி பேசவில்லை.” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

