• Login
Monday, April 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சபா கடலில் முக்குளிப்பில் ஈடுபட்ட சீன சுற்றுப்பயணி நீரில் மூழ்கி உயிரிழப்பு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 20, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
சபா கடலில் முக்குளிப்பில் ஈடுபட்ட சீன சுற்றுப்பயணி நீரில் மூழ்கி உயிரிழப்பு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோத்தா கினபாலு:

சபா கடற்பகுதியில் முக்குளிப்பில் ஈடுபட்ட சீனாவைச் சேர்ந்த சுற்றுப்பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இச்சம்பவம் திங்கட்கிழமை (மே 19) காலை சபாவின் செம்பூர்ணா பகுதியைச் சேர்ந்த சிப்பாடான் தீவின் கடற்பகுதியில் நிகழ்ந்தது

அந்த 37 வயது ஆடவர் தமது மனைவியுடனும் மற்ற சிலருடனும் கடலில் முக்குளித்துக் கொண்டிருந்தபோது அசம்பாவிதம் நிகழ்ந்ததாக அதிகாரிகள் கூறினர்.

சம்பவத்தின்போது அவர்களுடன் முக்குளிப்பு வழிகாட்டிகளும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

சீன சுற்றுப்பயணியின் மரணம் குறித்து மாலை 6.45 மணிக்குத் தகவல் கிடைத்ததாக செம்பூர்ணா காவல்துறைத் தலைவர் முகமட் சப்ரி ஸைனுல் தெரிவித்தார்.

ஐந்து முக்குளிப்பு வழிகாட்டிகளுடன் எட்டு பேர் முக்குளித்துக்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

முக்குளித்துக்கொண்டிருந்த சுற்றுப்பயணிகள் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த ஆடவர் தங்கள் அனுமதி இன்றி படகிலிருந்து கடலில் குதித்ததாகவும் அதன் பிறகு அவர் கடலில் மூழ்கியதாகவும் முக்குளிப்பு வழிகாட்டிகள் கூறினர்.

இதைப் பார்த்த படகோட்டி தங்களிடம் அதுகுறித்து தெரிவித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

கடலில் மூழ்கியவரைத் தேடி மீட்கும் பணி உடனடியாக முடுக்கிவிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

25 மீட்டர் ஆழத்தில் அந்த ஆடவரைக் கண்டெடுத்ததாக முக்குளிப்பு வழிகாட்டிகள் கூறினார்.

கடலில் மேற்பரப்புக்கு அவர் உடனடியாகக் கொண்டு வரப்பட்டு அவருக்கு முதலுதவி வழங்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

“அந்த ஆடவர் சுயநினைவின்றிக் கிடந்தார். அவர் மூச்சுவிடவில்லை. அதுமட்டுமின்றி வாந்தியும் எடுத்தார்,” என்றார் முகமட் சப்ரி.

பாதிக்கப்பட்ட ஆடவர் செம்பூர்ணா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பிறகு தாவாவ் மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.



Read More

Previous Post

40 வயசுல முதலீடு செய்தாலும் ரூ.4 கோடி சேமிக்கலாம்…! செம பிளான்

Next Post

படிப்படியாக நிலைபெற்று வரும் தென்மேற்கு பருவமழை

Next Post
படிப்படியாக நிலைபெற்று வரும் தென்மேற்கு பருவமழை

படிப்படியாக நிலைபெற்று வரும் தென்மேற்கு பருவமழை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin