கோத்தா கினபாலு:
சபா மாநிலத்தின் 17ஆம் சட்டமன்றத் தேர்தலில் ஜசெகாவின் (DAP) மோசமானதோல்விக்கு தான் தார்மீகப் பொறுப்பேற்பதாகக் கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோனி லோக் தெரிவித்துள்ளார்.
கடந்த 2020 சபா தேர்தலில் ஜசெகா வெற்றி பெற்ற எட்டு சட்டமன்றத் தொகுதிகளையும் இந்த முறை முழுவதுமாக இழந்துள்ளது. இந்த எட்டு இடங்களிலும் கட்சி தோல்வி கண்டதை அவர் உறுதிப்படுத்தினார்.
“சபா வாக்காளர்கள் எடுத்த முடிவை நாங்கள் மதிக்கிறோம். ஜனநாயகத்தில் மக்கள் தீர்ப்பே உயர்ந்தது,” என்று அந்தோனி லோக் கூறினார்.
சபாவில் கட்சி கடுமையான பின்னடைவு சந்தித்திருந்தாலும், DAP இன் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் , கோத்தா கினபாலு எம்.பி. சான் ஃபூங் ஹின், சண்டாகான் எம்.பி. விவியன் வோங் ஆகியோர் இன்னும் சபாவில் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த முடிவுகள் சபா மாநிலத்தில் அரசியல் நிலைமை மாற்றத்தைக் காட்டுவதாகவும், எதிர்காலத்தில் மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க கட்சி அதிக முயற்சிகள் மேற்கொள்ளும் என்றும் போக்குவரத்து அமைச்சருமான அந்தோனி லோக் தெரிவித்தார்.
The post சபாவில் ஏற்பட்ட தோல்விக்கு ‘முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்’: அந்தோனி லோக் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

