Last Updated:
19 நாட்கள் நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நிறைவடைந்தது. ஓம் பிர்லா கூட்டத்தில் மோடி, பிரியங்கா காந்தி, ஆ. ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வந்தே மாதரம் பாடலுடன் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நடத்திய கூட்டத்தில் பிரதமர் மோடி, எம்.பி.க்கள் பிரியங்கா காந்தி, ஆ. ராசா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நடப்பாண்டுக்கான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 1ஆம் தேதி இரு அவைகளிலும் தொடங்கின. மொத்தம் 19 நாட்கள் நடந்த கூட்டத் தொடரில் வந்தே மாதரம் முழக்கம் தொடங்கி 150 ஆண்டுகள் நிறைவு பெற்றதை ஒட்டி சிறப்பு விவாதம் நடத்தப்பட்டன. மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், திருப்பரங்குன்றம் மலை விவகாரம் குறித்தும் நாடாளுமன்றத்தில் காரசார விவாதங்கள் நடைபெற்றன. டெல்லி காற்று மாசு விவகாரமும் நாடாளுமன்றத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை விக்சித் பாரத் ரோஜ்கர் மற்றும் அஜீவிகா மிஷன் எனப்படும் விபி-ஜி ராம் ஜி மசோதா, அணுசக்தி துறையில் தனியார் பங்களிப்புக்கு அனுமதி உள்ளிட்ட மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.
#WATCH | Delhi | Lok Sabha Speaker Om Birla holds a meeting with the leaders of parties and Members of Parliament in Lok Sabha, in his Chamber in Parliament House on the conclusion of Winter Session of Parliament. Prime Minister Narendra Modi is also present at the meeting. pic.twitter.com/extCsBGoot
— ANI (@ANI) December 19, 2025
மொத்தம் 19 நாட்கள் நடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர், வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக, 100 நாள் வேலை திட்டத்தில் மத்திய அரசு சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, நாடாளுமன்றக் கட்டிடத்தில் உள்ள தனது அலுவலகத்தில், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் மக்களவை உறுப்பினர்களுடன் ஒரு கூட்டத்தை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, எம்.பி.க்கள் பிரியங்கா காந்தி, ஆ. ராசா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சபாநாயகர் ஓம் பிர்லா நடத்திய கூட்டம்; பிரதமர் மோடி, எம்.பி. பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்பு


