சபாநாயகர் அசோக ரன்வலவின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இது தொடர்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சபாநாயகரின் கல்வித்தகைமை குறித்து சர்ச்சை எழுந்துள்ளதால் தாம் பதவியிலிருந்து விலகுவதாக அசோக ரன்வெல நேற்று (13) அறிவித்திருந்தார்.
சபாநாயகரின் பதவி விலகலை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டால், புதிய சபாநாயகரை மீண்டும் நாடாளுமன்றம் தெரிவு செய்ய வேண்டும் எனவும், பொதுச் சட்டத்தின் கீழ் வாக்களித்து அல்லது நியமனம் மூலம் புதிய சபாநாயகரை தெரிவு செய்ய முடியும் என பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்திருந்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

