முதல் கட்டமாக மண்டல பூகைக்காக இன்று மாலை 4 மணிக்கு நடை திறக்கப்படவுள்ளது. நாளை முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.
இன்று மாலை 4 மணிக்கு தலைமை அர்ச்சகர் பிஎன் மகேஷ் நம்பூதிரி ஐயப்பன் சன்னதியில் விளக்கேற்றவுள்ளார். தொடர்ந்து, சபரிமலை மற்றும் மாளிகபுரம் கோயிலுக்கான புதிய தலைமை அர்ச்சகர்கள் பொறுப்பேற்கவுள்ளனர்.
மண்டல பூஜை டிச. 26 நடைபெறவுள்ளது. அதன்பின் நடை அடைக்கப்பட்டு டிச. 30-ஆம் தேதி மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் நடை திறக்கப்படும்.
மகரவிளக்கு பூஜை ஜனவரி 14-ஆம் தேதி நடைபெற்ற பிறகு, படிப் பூஜை நடத்தப்பட்டு நடை அடைக்கப்படும்.
ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் ஒரு நாளுக்கு 80 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதிக்கப்படவுள்ளனர். எரிமேலி, பம்பை, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

