Last Updated:
கேரளத் தேர்தல் சூடு, திருவல்லாவில் நரேந்திர மோடி சபரிமலை தங்கக் கொள்ளையில் இடதுசாரி ஆட்சி காங்கிரஸ் கூட்டணி ஈடுபாடு குற்றம், ராகுல் காந்தி மோடியை எதிர்த்து விமர்சனம்
கேரளாவில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் சபரிமலை கோயிலில் இடதுசாரி கட்சியும், காங்கிரஸூம் கொள்ளையடித்ததை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கேரளாவில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளன. ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம் மாவட்டங்களில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி தனது அனைத்து பரப்புரையிலும் கடவுள், கோயில், மதம் பற்றி பேசி வருவதாகக் குறிப்பிட்டார். ஆனால், சபரிமலை தங்கத் திருட்டு புகார் பற்றி இதுவரை பிரதமர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று விமர்சித்தார். இந்தத் தேர்தலில் இடதுசாரி கட்சி வெற்றி பெற வேண்டும் என பிரதமர் விரும்புவதாகவும் ராகுல் தெரிவித்தார்.
இந்நிலையில், திருவல்லாவில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இடதுசாரி ஆட்சியில் சபரிமலை கோயிலில் கொள்ளை நடைபெற்றுள்ளதாகவும், அதன் மூலம் அதிகப் பயனடைந்தவர்கள் காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் என்றும் சாடினார். காங்கிரஸும், அதன் கூட்டணிக் கட்சிகளும் வளைகுடா நாடுகளில் பணிபுரியும் கேரள மக்களை ஆபத்திற்கு உள்ளாக்குவதாகவும் பிரதமர் குற்றம்சாட்டினார். மேலும் கேரளாவில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் சபரிமலை கோயிலில் இடதுசாரி கட்சியும், காங்கிரஸூம் கொள்ளையடித்ததை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


