
Last Updated:
20ஆம் தேதி பந்தளம் ராஜ குடும்பத்தினர் ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்கின்றனர். பின்னர் மாலை ஆறு முப்பது மணிக்கு பூஜை நடத்தப்பட்டு நடை சாத்தப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயில் மகரவிளக்கு பூஜை ஜனவரி 19ஆம் தேதியுடன் நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டு டிசம்பர் 27ஆம் தேதி நடை சாத்தப்பட்டது. தொடர்ந்து டிசம்பர் 30ஆம் தேதி மீண்டும் நடை திறக்கபப்பட்டு மகரவிளக்கு பூஜை நடந்து வருகிறது. மகரவிளக்கு திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகரஜோதி தரிசனம் ஜனவரி 14ஆம் தேதி மாலை நடைபெற்றது.
இந்நிலையில், நடப்பாண்டுக்கான மகரவிளக்கு பூஜை வரும் 19ஆம் தேதியுடன் நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று மாலை 6 மணி வரை மட்டுமே பம்பையில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து இரவு 10 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து 20ஆம் தேதி பந்தளம் ராஜ குடும்பத்தினர் ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்கின்றனர். பின்னர் மாலை ஆறு முப்பது மணிக்கு பூஜை நடத்தப்பட்டு நடை சாத்தப்படுகிறது. அத்துடன் நடப்பாண்டுக்கான மகரவிளக்கு பூஜை வழிபாட்டு காலம் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
January 18, 2025 7:36 AM IST

