• Login
Tuesday, February 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச முறைகேடு வழக்கு… நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை சம்மன்… | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 10, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச முறைகேடு வழக்கு… நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை சம்மன்… | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 10, 2026 7:22 PM IST

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச முறைகேடு வழக்கில் நடிகர் ஜெயராமுக்கு சம்மன் அனுப்பப்பட்ட சம்பவத்தால், விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

Rapid Read
News18
News18

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச முறைகேடு வழக்கில் நடிகர் ஜெயராம் நேரில் ஆஜராகக் கூறி, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கோயில் நகைகளை தனது வீட்டில் வைத்து பூஜை செய்து சிக்கலில் மாட்டிக் கொண்டது எப்படி?

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலக பிரசித்தி பெற்றதாகும். இந்த கோயிலில் உள்ள துவார பாலகர்கள் சிலைகளில் இருந்த தங்க கவசங்களை செப்பனிட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, செப்பனிடும் பணிக்காக தங்க கவசங்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அப்போது தங்க கவசத்தில் சுமார் நான்கரை கிலோ தங்கம் திருடப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கேரள உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்தது. அத்துடன், அம்மாநில கூடுதல் டிஜிபி வெங்கடேஷ் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில் தனித்தனியாக இரண்டு வழக்குகளைப் பதிவு செய்த விசாரணைக் குழு, அதிரடி விசாரணையில் இறங்கியது. முறைகேடு தொடர்பாக தங்க கவசங்களை புதுப்பிக்கும் செலவை ஏற்றுக்கொண்ட தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி, கோயில் தந்திரி கண்டரரு ராஜீவர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், கேரள போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், பண மோசடி வழக்கை கடந்த 9ஆம் தேதி அமலாக்கத் துறையும் கையில் எடுத்தது.

இதனிடையே நடிகர் ஜெயராமின் வீட்டில் சபரிமலை தங்க கவசங்களை வைத்து பூஜை செய்த படங்கள் வெளியாகின. இதையடுத்து சென்னையில் உள்ள அவரின் வீட்டில் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் உன்னிகிருஷ்ணன் போத்தியுடன் ஜெயராம் நீண்ட நாட்களாக தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது.

எனவே, உன்னிகிருஷ்ணன் உடனான தொடர்பு, அவர் மேற்கொண்ட பணப்பரிவர்த்தனை தொடர்பாகவும் ஜெயராமிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக, ஜெயராமிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு முடிவு செய்துள்ளது. அதன்படி, அடுத்த வாரம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகக் கூறி சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த சூழலில் நடிகர் ஜெயராமுக்கு சம்மன் அனுப்பப்பட்ட சம்பவத்தால், சபரிமலை தங்கக்கவச முறைகேடு வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது.

Read More

Previous Post

Tamilmirror Online || பொறியில் சிக்கி சிறுத்தை பலி

Next Post

உலகக்கோப்பை தொடர்களில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப்.. வரலாறு படைத்தது நியூசிலாந்து அணி! | கிரிக்கெட் செய்திகள்

Next Post
உலகக்கோப்பை தொடர்களில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப்.. வரலாறு படைத்தது நியூசிலாந்து அணி! | கிரிக்கெட் செய்திகள்

உலகக்கோப்பை தொடர்களில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப்.. வரலாறு படைத்தது நியூசிலாந்து அணி! | கிரிக்கெட் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin