பல்வேறு மாநிலங்களில் வழக்குப்பதிவு
உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் பல்வேறு வழக்குகள் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தொடரப்பட்டது. இந்த நிலையில் சனாதன தர்மம் குறித்து பேசிய விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் தனது கருத்துக்காக பல மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட பல எஃப்.ஐ.ஆர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தார். அந்த வழக்கு விசாரணையின் போது, நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், உதயநிதி ஸ்டாலின் ஒரு சாதாரண மனிதர் அல்ல, ஒரு அமைச்சர் என்றும், அவரது கருத்துக்களின் விளைவுகளை அவர் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறி இருந்தனர்.

