இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கியிலான இருதரப்பு நீண்டகால உறவு மற்றும் கூட்டுப் பயணத்தின் ஒரு சிறந்த வெளிப்பாடாடு பெரும் பக்க பலமாக அமைந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவின் நேரடித் தலையீடுகள் மற்றும் இலங்கை காவல்துறையின் மீதான அவரது அக்கறை தங்களுக்கு பெரும் பலத்தையும் தைரியத்தையும் தருகின்றது எனவும் கூறியுள்ளார்.
இலங்கை காவல்துறையின் பாவனைக்காக இந்திய அரசாங்கத்தினால் 134 கெப் (Cab) ரக வாகனங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.
ஆனந்த விஜயபால
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பங்களிப்புடன், கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலக வளாகத்தில் இந்த வாகனங்கள் கையளிக்கப்பட்டன.

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால, இந்திய உயர் ஸ்தானிகரின் செயற்பாடுகளைப் வெகுவாகப் பாராட்டியிருந்தார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சர்,
சந்தோஷ் ஜாவின் நேரடித் தலையீடு
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவின் நேரடித் தலையீடுகள் மற்றும் இலங்கை காவல்துறையின் மீதான அவரது அக்கறை தங்களுக்கு பெரும் பலத்தையும் தைரியத்தையும் தருகின்றது.

இலங்கை காவல்துறையின் மேம்பாடு, பயிற்சிகள் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் தொடர்ச்சியாக உதவி வருகின்றது.
இந்த புதிய வாகனங்களின் சேர்க்கையானது, இலங்கை மக்களுக்கு காவல்துறை மிகவும் வினைத்திறனான சேவையை வழங்குவதற்கு வழிவகுக்கும்.
இந்த அன்பளிப்பானது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பு மற்றும் கூட்டுப் பயணத்தின் ஒரு சிறந்த வெளிப்பாடாகும்” என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

