• Login
Wednesday, February 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சந்தையில் கடைபோடுவது தொடர்பான மோதல்… பெண் மீது சரமாரி தாக்குதல் சம்பவத்தின் பின்னணி என்ன…? | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 11, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
சந்தையில் கடைபோடுவது தொடர்பான மோதல்… பெண் மீது சரமாரி தாக்குதல் சம்பவத்தின் பின்னணி என்ன…? | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 11, 2026 7:57 PM IST

மத்தியப் பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் பெண் ஒருவர் பட்டப்பகலில் தாக்கப்பட்ட சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Rapid Read
News18
News18

மத்தியப் பிரதேசத்தில் சந்தையில் கடை போடுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒரு பெண் சரமாரியாக தாக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி, அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டப்பகலில் பலர் முன்னிலையில் பெண் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி என்ன?

மத்தியப் பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹேமாசிங். இவர் பஹ்ரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பன்வார் கிராமத்தில் நடைபெற்றுவந்த சந்தையில் கடந்த 8 வருடங்களாக ஒரு காய்கறிக்கடை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

அவர் கடை போட்ட பகுதிக்கு சந்தோஷ் பதக் என்பவர் திடீரென வந்து சொந்தம் கொண்டாடி வந்துள்ளார். அந்த இடத்தில், ஹேமா கடை போடக்கூடாது என்றும், அது தன்னுடைய பகுதி என்றும் கூறி தொடர்ந்து சண்டையிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு அப்பகுதிக்கு வந்த சந்தோஷ் பதக் ஹேமா சிங்கிடம் தகராறில் ஈடுபட ஆரம்பித்துள்ளார். அன்று இரவு அவரது கடையை அடித்து உடைத்த அவர், பொருட்களையும் நாசம் செய்ததாகக் கூறப்படுகிறது. அது குறித்து காவல் நிலையத்தில் ஹேமா புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தோஷ் பதக்கும், அவரது நண்பர் ராகுல் திவிவேதி என்பவரும் ஹேமாசிங் கடைக்கு மீண்டும் வந்துள்ளனர். கடையை காலி செய்வது குறித்து அவர்களுக்குள் மீண்டும் மோதல் வெடித்துள்ளது.

இதையும் படிங்க: மனைவியை கொன்று இன்ஸ்டா லைவ்… துடிக்க துடிக்க கழுத்தில் கோடாரி வெட்டு… அரக்கனாக மாறிய கணவன்…

இந்தமுறை பொங்கியெழுந்த ஹேமா, தனது செருப்பை கழற்றி சந்தோஷ் பதக் மீது சரமாரியாக அடிக்கப் பாய்ந்துள்ளார். இதனால் ஆத்திரம் தலைக்கேறிய சந்தோஷ் அருகில் கிடந்த கம்பு ஒன்றை எடுத்து, பெண் என்றும் பாராமல் ஹேமாவை சரமாரியாக வெளுத்தெடுத்திருக்கிறார். இவர்களது மோதலால் அந்த பகுதியே சற்று நேரம் பதற்றமாக காணப்பட்டது. பெண் ஒருவர் பட்டப்பகலில் தாக்கப்பட்டதால் இந்த சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More

Previous Post

Tamilmirror Online || ரணிலின் செயலாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Next Post

“நீங்கள் பாரத மாதாவை விற்றுவிட்டீர்கள்” – நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி ஆவேசம் | Makkal Osai

Next Post
“நீங்கள் பாரத மாதாவை விற்றுவிட்டீர்கள்” – நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி ஆவேசம் | Makkal Osai

“நீங்கள் பாரத மாதாவை விற்றுவிட்டீர்கள்” - நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி ஆவேசம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin