Last Updated:
அரசின் இத்தகைய நடவடிக்கைகள் சந்தையில் நிலைத்தன்மையையும், சிறு முதலீட்டாளர்களின் நிதிப் பாதுகாப்பையும் உறுதி செய்யும்
மத்திய பட்ஜெட் 2026-ல் அறிவிக்கப்பட்ட பங்குப் பரிவர்த்தனை வரி (STT) உயர்வு குறித்து எழுந்துள்ள விமர்சனங்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.
பங்கு பரிவர்த்தனை வரி குறித்து நியூஸ் 18 குழுமத்தின் ஆசிரியர் ராகுல் ஜோஷி எழுப்பிய கேள்விக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது-
இந்த வரி உயர்வு என்பது ஒட்டுமொத்தப் பங்குச் சந்தையையும் பாதிக்கும் ஒன்றல்ல என்றும், இது ‘ஃபியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ்’ (F&O) எனப்படும் அதிக அபாயம் கொண்ட வர்த்தகப் பிரிவிற்கு மட்டுமே பொருந்தும்.
பங்குச் சந்தையில் நிலவும் ஆரோக்கியமற்ற ஊக வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தவே இந்தத் திட்டமிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாதாரணப் பங்கு முதலீடுகளை அரசு எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. என்றார்.
மேலும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்த நிதியமைச்சர், ஆதாரமற்றக் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை விட தரவுகளுடன் கூடிய ஆக்கபூர்வமான விவாதங்களை எதிர்க்கட்சிகள் முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், மூலதன ஆதாய வரி மாற்றங்கள் என்பது வரி விதிப்பை எளிமையாக்கும் ஒரு முயற்சியே அன்றி, முதலீட்டாளர்களைச் சுமைக்குள்ளாக்கும் நோக்கம் கொண்டதல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
அரசின் இத்தகைய நடவடிக்கைகள் சந்தையில் நிலைத்தன்மையையும், சிறு முதலீட்டாளர்களின் நிதிப் பாதுகாப்பையும் உறுதி செய்யும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
Feb 02, 2026 10:30 PM IST
சந்தைக்கான எச்சரிக்கை.. முதலீட்டாளருக்கான பாதுகாப்பு! – STT வரி உயர்வு குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்


