Last Updated:
அரிஸ்டா நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வருகிறார் ஜெயஸ்ரீ உல்லால். இங்கிலாந்தின் தலைநகரம் லண்டனில் பிறந்த ஜெயஸ்ரீ உல்லால், டெல்லியில் வளர்ந்தார்.
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று சொன்ன காலம் எல்லாம் மலையேறிப் போயாச்சு. இன்று இந்தியப் பெண்கள் வணிகம், தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகளில், உள்ளூரிலும் வெளிநாட்டிலும் தங்கள் முத்திரையைப் பதித்து வருகின்றனர். அவர்களில் ஒருவர்தான் ஜெயஸ்ரீ உல்லால். பணக்கார இந்தியர்களின் பட்டியலில் இவரும் இடம்பிடித்துள்ளார். 2025ஆம் ஆண்டுக்கான ஹுருன் இந்திய பணக்காரர்கள் பட்டியலில், ரூ.50,170 கோடி சொத்துக்களுடன் உலகின் பணக்கார இந்திய தொழில்முறை மேலாளராக இவரது பெயரும் இடம்பெற்றுள்ளது.
மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா மற்றும் கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை போன்ற முக்கிய தொழில்நுட்ப ஜாம்பவான்களைவிட இவரது சொத்து அதிகமாக உள்ளது. இதிலிருந்தே உல்லாலின் சாதனை எவ்வளவு பெரியது என்பதை நம்மால் அளவிட முடியும். இந்தியாவில் உள்ள பணக்காரப் பெண்களை எடுத்துக்கொண்டால், நாயக்காவின் ஃபால்குனி நாயர் மற்றும் ஜோஹோவின் ராதா வேம்புவைவிட ஜெயஸ்ரீ உல்லாலிடம் அதிக செல்வம் உள்ளது.
அரிஸ்டா நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வருகிறார் ஜெயஸ்ரீ உல்லால். இங்கிலாந்தின் தலைநகரம் லண்டனில் பிறந்த ஜெயஸ்ரீ உல்லால், டெல்லியில் வளர்ந்தார். சான் பிரான்சிஸ்கோ மாநில பல்கலைக்கழகத்தில் மின் பொறியியலையும், சாண்டா கிளாரா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டத்தையும் முடித்துள்ளார்.
2008ஆம் ஆண்டு அரிஸ்டா நெட்வொர்க்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் அந்நிறுவனத்தின் தலைவராக பதவியேற்றார் ஜெயஸ்ரீ. அதன் பின்னர் இந்நிறுவனத்தை சிலிக்கான் வேலியின் நெட்வொர்க்கிங் ஜாம்பவான்களுக்கு இணையாக கொண்டுவருவதற்காக அயராது பணியாற்றி வருகிறார்.
அவருடைய அபரிமிதமான செல்வத்திற்குப் பின்னால் இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவதாக, அவர் அரிஸ்டா நெட்வொர்க்ஸ் நிறுவனத்தில் மூன்று சதவீத பங்கை வைத்திருக்கிறார். இரண்டாவதாக, அவரிடமிருந்த பெரும் பங்களிப்புடன் நிறுவனம் பெற்ற மகத்தான வளர்ச்சி.
2024ஆம் ஆண்டில் அரிஸ்டா நெட்வொர்க்ஸின் மதிப்பீடு மட்டுமே 7 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்ந்ததாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்தது. இது ஜெயஸ்ரீ உல்லாலின் சொத்து மதிப்பை இன்னும் அதிகமாக்கியது. இதன் மூலம், சிலிக்கான் வேலியின் மிகவும் வெற்றிகரமான நெட்வொர்க்கிங் நிறுவனங்களில் பலவற்றுடன் அரிஸ்டா நெட்வொர்க்ஸும் இணைந்துள்ளது. மேலும், ஜெயஸ்ரீ உல்லாலின் தலைமையின் கீழ், உலகளாவிய தொழில்நுட்ப சந்தையில் முன்னணி நிறுவனமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான ஹுருன் பணக்காரர்கள் பட்டியலின்படி, மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லாவின் சொத்து மதிப்பு ரூ.9,770 கோடி ஆகும். அதே நேரத்தில் கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு ரூ.5,810 கோடி ஆகும். இதன் மூலம் இந்தப் பட்டியலில் அவர் ஏழாவது இடத்தில் உள்ளார். பெப்சிகோவின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி இந்திரா நூயி, ரூ.5,130 கோடி சொத்து மதிப்புடன் இந்தியாவின் பணக்காரர் பட்டியலில் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
October 13, 2025 4:28 PM IST
சத்யா நாதெல்லா, சுந்தர் பிச்சையைவிட பணக்கார பெண்…! இவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…?


