ஓய்வூதியர்கள் முற்றுகைப் போராட்டம்:
சென்னை காமராஜர் சாலைப்பகுதியில் மகளிர் உரிமைத்துறை இயக்கம் செயல்பட்டு வருகிறது. அங்கு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநில மையம் சார்பில் 300-க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, அவர்கள் தங்களது வாக்குறுதிகளாகத் தெரிவிப்பது ஏழாவது ஊதியக்குழுவின் அநீதிகளைக் களைந்து, நீதியரசர் பட்டு தேவானந்த் வழங்கிய தீர்ப்பின்படி சிறப்புப் பென்ஷனை உயர்த்தி வழங்கவேண்டும் என்று கூறி, அதாவது ரூ.6,750 என்கிற பென்ஷன் ஒரு சாராருக்கும், மற்றொரு சாரார்க்கு சிறப்பு பென்ஷனும் வழங்க வேண்டும் என்றும் கூறி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

