சத்தீஸ்கா் உருக்கு ஆலை விபத்தில் சிக்கிய மேலும் 3 தொழிலாளர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
சத்தீஸ்கர் மாநிலம், ராய்பூரில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள முங்கேலி மாவட்டத்தின் ராம்போத் கிராமத்தில் உள்ள தனியாா் உருக்கு ஆலையில் வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் விபத்து ஏற்பட்டது.
ஆலையில் இருந்த இரும்பு சேமிப்புக் கலன் இடிந்து விழுந்ததில் தொழிலாளா்கள் சிலா் இடிபாடுகளில் சிக்கினா்.
சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினா், மீட்புப் பணியில் ஈடுபட்டு 2 தொழிலாளா்களை மீட்டனா். அவா்கள் அருகிலுள்ள பிலாஸ்பூா் நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
மனோஜ் குமாா் எனும் தொழிலாளி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.

