• Login
Thursday, August 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சத்தமில்லாமல் Hugging Face நிறுவனத்தை வாரி சுருட்டிக்கொண்ட Nvidia.. ஏஐ துறையில் அடுத்த மாஸ்டர்ஸ்ட்ரோக்! | Beyond Chips Nvidia soon to Dominates AI Software Landscape with Massive $12.9 Billion Acquisition of Hugging Face

GenevaTimes by GenevaTimes
August 27, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
சத்தமில்லாமல் Hugging Face நிறுவனத்தை வாரி சுருட்டிக்கொண்ட Nvidia.. ஏஐ துறையில் அடுத்த மாஸ்டர்ஸ்ட்ரோக்! | Beyond Chips Nvidia soon to Dominates AI Software Landscape with Massive $12.9 Billion Acquisition of Hugging Face
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சத்தமில்லாமல் Hugging Face நிறுவனத்தை வாரி சுருட்டிக்கொண்ட Nvidia.. ஏஐ துறையில் அடுத்த மாஸ்டர்ஸ்ட்ரோக்!

உலகளாவிய ஏஐ துறை வளர்ச்சியில் முதுகெலும்பாக இருக்கும் என்விடியா நேற்று வெளியிட்ட காலாண்டு முடிவில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 106 சதவீத வருடாந்திர வளர்ச்சியில் ஜூன் காலாண்டில் சுமார் 96.2 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டியுள்ளது. இதில் டேட்டா சென்டர் வர்த்தகத்தில் இருந்து மட்டுமே 89 பில்லியன் டாலர் தொகை வருமானமாக ஈட்டியுள்ளது. இதே காலாண்டில் என்விடியா சுமார் 75 சதவீத லாப விகிதத்துடன் 68 பில்லியன் டாலர் லாபத்தை பதிவு செய்துள்ளது.

கடந்த சில மாதங்களாக என்விடியா வன்பொருள் வர்த்தகத்தில் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து நிலைநாட்டிக்கொண்டு மென்பொருள் சேவையிலும், தனிப்பட்ட ஏஐ மாடல்களை உருவாக்குவதிலும் கவனம் செலுத்து முடிவு செய்தது. இப்பிரிவு சேவையை மேம்படுத்த முதல் படியா என்விடியா Hugging Face என்ற ஓப்பன் சோர்ஸ் ஏஐ மாடல் நிறுவனத்தை முழுமையாக வாங்கவும், இதற்காக 12.9 பில்லியன் டாலர் தொகையை அளிக்கவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சத்தமில்லாமல் Hugging Face நிறுவனத்தை வாரி சுருட்டிக்கொண்ட Nvidia.. ஏஐ துறையில் அடுத்த மாஸ்டர்ஸ்ட்ரோக்!

இது செயற்கை நுண்ணறிவு துறையில் பெரிய மாற்றமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜென்சன் ஹுவாங் தலைமையிலான இந்த நிறுவனம், AI தொழில்நுட்பத்திற்கான தேவை உச்சத்தை எட்டிவிடவில்லை என்று தீவிரமாக நம்புகிறார்.

இதேவேளையில் கூகுகள், Anthropic மற்றும் OpenAI போன்ற ஏஐ மாடல் நிறுவனங்கள் Nvidia சிப்களுக்கு மாற்றாக தங்கள் சொந்த சிப்களை உருவாக்க முயலும் வேளையில், Nvidia இந்த நிறுவனத்தை கைப்பற்றியது மூலம் சொந்த ஏஐ மாடல் உருவாக்குவதில் கூடுதல் கட்டுப்பாட்டையும் ஆதிக்கத்தையும் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹக்கிங் பேஸ் என்பது செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) உலகத்திற்கான ஒரு பிரம்மாண்டமான கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோர் போன்றது.

தற்போது நாம்முடைய தேவைக்கு ஏற்றார் போல் போனில் விதவிதமான ஆப்ஸ்கள் பயன்படுத்துகிறோம் அல்லவா? கேமரா ஆப், கேம்ஸ் ஆப், வாட்ஸ்அப் என எல்லாவற்றையும் ஒரே இடத்தில் இருந்து அதாவது Play Store-ல் டவுன்லோட் செய்கிறோம்.

அதேபோல, உலகத்தில் உள்ள பெரிய பெரிய நிறுவனங்களும், கம்ப்யூட்டர் இன்ஜினியர்களும் பல வகையான AI தொழில்நுட்பங்களை உருவாக்கி வைத்துள்ளனர். இந்த அனைத்து AI தொழில்நுட்பங்களையும் ஒரே இடத்தில் சேமித்து வைக்கும் இடம்தான் ஹக்கிங் பேஸ்.

இதனால் என்ன பயன் என நீங்கள் கேட்கலாம்… ஒரு கம்பெனிக்கு புதுசா ஒரு AI ஆப் செய்ய வேண்டும் என்றால், அவர்கள் ஆரம்பத்தில் இருந்து கஷ்டப்பட்டு கோடிங் எழுதத் தேவையில்லை. ஹக்கிங் பேஸ் தளத்திற்குச் சென்று, ஏற்கனவே யாரோ செய்து வைத்துள்ள ஒரு AI மாடலை எடுத்து, அவர்களுக்குத் தகுந்தாற்போல் மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

இதை அடிப்படையாக வைத்து என்விடியா நிறுவனத்தால் புது ஏஐ மாடலே வேகமாகவும், திறன்மிக்கதாகவும் உருவாக்க முடியும். இதை என்விடியா ஓப்பன் சோர்ஸ் முறையில் கொடுத்தால் அமெரிக்க ஏஐ நிறுவனங்களுக்கு மட்டும் அல்லாமல் சீனா நிறுவனங்களுக்கும் பெரும் போட்டியாக இருக்கும்.

ஒரு ஏஐ மாடலுக்கு முக்கிய தேவையாக இருக்கும் ஏஐ கட்டமைப்பு என்விடியா நிறுவனத்திடம் இருக்கும் வேளையில் ஒரு ஏஐ மாடலை இந்த ஹக்கிங் பேஸ் மூலம் எளிதாக உருவாக்க முடியும்.

Share This Article

English summary

Beyond Chips Nvidia soon to Dominates AI Software Landscape with Massive $12.9 Billion Acquisition of Hugging Face

Beyond Chips Nvidia soon to Dominates AI Software Landscape with Massive $12.9 Billion Acquisition of Hugging Face — சத்தமில்லாமல் Hugging Face நிறுவனத்தை வாரி சுருட்டிக்கொண்ட Nvidia.. ஏஐ துறையில் அடுத்த மாஸ்டர்ஸ்ட்ரோக்!

Story first published: Thursday, August 27, 2026, 14:41 [IST]

Read More

Previous Post

“சோனல் தினுஷாவைப் பார்த்தால் சச்சின் போல இருக்கிறது” – பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா புகழாரம் | கிரிக்கெட் செய்திகள்

Next Post

ஒரு சொட்டு மழைகூட இல்லை… ஆனாலும் சுனாமி! பல நூறு உயிர்களை பறித்த நேபாள் பெருவெள்ளத்தின் பின்னணிதான் என்ன?

Next Post
ஒரு சொட்டு மழைகூட இல்லை… ஆனாலும் சுனாமி! பல நூறு உயிர்களை பறித்த நேபாள் பெருவெள்ளத்தின் பின்னணிதான் என்ன?

ஒரு சொட்டு மழைகூட இல்லை... ஆனாலும் சுனாமி! பல நூறு உயிர்களை பறித்த நேபாள் பெருவெள்ளத்தின் பின்னணிதான் என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin