• Login
Wednesday, August 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சட்டைக்குள்ளேயே ஃபேன்! ஜப்பானின் நம்ப முடியாத விசித்திர கண்டுபிடிப்பு! இந்த AC விலை இவ்வளவுதானா? | Japan’s Fan-Powered AC Shirt: Price, Features, How It Works and Why It’s Going Viral

GenevaTimes by GenevaTimes
August 5, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
சட்டைக்குள்ளேயே ஃபேன்! ஜப்பானின் நம்ப முடியாத விசித்திர கண்டுபிடிப்பு! இந்த AC விலை இவ்வளவுதானா? | Japan’s Fan-Powered AC Shirt: Price, Features, How It Works and Why It’s Going Viral
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Hema Vandhana

Time
Updated: Wednesday, August 5, 2026, 17:33 [IST]

பீஜிங்: ஜப்பான் என்றாலே டெக்னாலஜி தான்.. புதுசு புதுசாக கண்டுபிடிப்புகளுக்கு பெயர் பெற்றது ஜப்பான் என்பது உலகமே அறிந்த விஷயம்.. இப்போது புதிதாக ஒன்றை கண்டுபிடித்துள்ளது.. கோடைக்கால வெப்ப அலை மற்றும் கடுமையான வெயிலை சமாளிக்க ஏசி சட்டையை கண்டுபிடித்துள்ளது.. அதாவது உடலிலேயே காற்று வீசி குளிர்ச்சியை தரக்கூடிய ஏசி சட்டையை அறிமுகப்படுத்தி உள்ளது.. இந்த குளுகுளு சட்டைதான் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

ஜப்பானின் முன்னணி ஆடை நிறுவனமான “யோஃபுகு நோ அலைாமா”, ஃபேன் ஆடைகளை தயாரிக்கும் FZN நிறுவனத்துடன் இணைந்து இந்த நவீன ஆடையை உருவாக்கியுள்ளது. இந்த குளு குளு சட்டைக்கு “கூச்சோ வேர் ஷார்ட்-ஸ்லீவ்டு ஷர்ட் என்று பெயரும் வைக்கப்பட்டுள்ளது.. இந்த சட்டையை பார்ப்பதற்கு, வழக்கமான ஃபார்மல் சட்டையை போலவே உள்ளது.

Japan Cooling AC Shirt

ஏசி சட்டை ரகசியம்

இந்த ஏசி சட்டையின் பின்புறம் இடுப்பு பகுதியில் மட்டும், சின்னதாக, எடை குறைந்த 2 ஃபேன்கள் பொருத்தப்பட்டுள்ளன. சட்டையின் உள்ளே இருக்கும் இந்த விசிறிகள், வெளிப்புற காற்றை உறிஞ்சி சட்டையின் உட்புறத்திற்குள் செலுத்துகின்றன. இதனால் உருவாகும் காற்று, உடலில் சுரக்கும் வியர்வையை உடனடியாக ஆவியாக்கி, உடலை எப்போதும் ஜில்லென்று வைத்திருக்க உதவுகிறது.

ஆனால், முன்பக்கத்திலிருந்தோ அல்லது பக்கவாட்டிலிருந்தோ பார்த்தால், இப்படியொரு ஃபேன் சட்டைக்குள் இருப்பதே தெரியாது.. மிகவும் நேர்த்தியாகவும் மறைவாகவும் இது டிசைன் செய்யப்பட்டுள்ளது.. சட்டையை துவைக்கும்போது, அதில் பொருத்தப்பட்டுள்ள ஃபேன் மற்றும் பேட்டரி பாகங்களை மட்டும் மிக எளிதாக கழற்றி வைத்துவிட்டுத் துவைக்க முடியுமாம்.

ஜப்பான் அசத்தல் கண்டுபிடிப்பு

இதற்கு முன்பு ஜப்பானில் கட்டுமான தொழிலாளர்கள், கழிவு மேலாண்மை பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் இதேபோல ஏர்-கண்டிஷன் ஆடைகளை பயன்படுத்தியிருக்கிறார்கள்.. ஆனால் அவையெல்லாம் ஜேக்கெட் அல்லது வெஸ்ட் வடிவில் மட்டுமே இருந்தன. ஆனால், இப்போதுதான் முதன்முறையாக கார்ப்பரேட் மற்றும் அலுவலக ஊழியர்கள் வெயிலில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பயணிக்கும்போது ஏற்படும் வியர்வையையும் சோர்வையும் தவிர்க்கும் வகையில் இந்த ஃபார்மல் சட்டை உருவாக்கப்பட்டுள்ளது.

Japan Cooling AC Shirt

சட்டையின் எடை பாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக, இதில் உள்ள ஒவ்வொரு விசிறியும் 95 கிராம் எடையும், ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரி பேக் 165 கிராம் எடையும் மட்டுமே கொண்டுள்ளன.

1986-க்குப் பிறகு மீண்டும்.. 40 ஆண்டுகளில் இல்லாத சரிவைச் சந்தித்த ஜப்பானின் 'யென்’

1986-க்குப் பிறகு மீண்டும்.. 40 ஆண்டுகளில் இல்லாத சரிவைச் சந்தித்த ஜப்பானின் ‘யென்’

வெயிலுக்கு டாட்டா

ப்ளூ கலர், சாம்பல் கலர்களில் M, L, XL ஆகிய அளவுகளில் கிடைக்கும் இந்த சட்டை, ஜப்பான் ரூபாய் மதிப்பில் 17,490 யென் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 2 ஃபேன், பேட்டரி பேக், சார்ஜிங் கேபிள் மற்றும் சட்டை அனைத்தும் அடங்கும்.

இப்போதைக்கு கோடை காலத்தில் ஜப்பானில் இந்த ஏசி சட்டைகளுக்கான தேவை எகிறி உள்ளதாம்.. வரும் நாட்களில் மற்ற நாடுகளுக்கும் இந்தத் தொழில்நுட்பம் பரவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்ப அலை அதிகரித்து வரும் சூழலில், வெயிலில் அலையும் இந்திய அலுவலக ஊழியர்களுக்கும் இதுபோன்ற ஆடைகள் விரைவில் அறிமுகமானால் கோடைகால பயணம் பெருமளவில் எளிதாகும் என்பதில் சந்தேகமில்லை…. ஆகமொத்தம் இப்போதைக்கு ஜப்பானின் இந்த புதிய முயற்சிதான் உலகளவில் பல ஆடை தயாரிப்பு நிறுவனங்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது…!!

English summary

Japan’s Cooling AC Shirt Goes Viral! Price and Secret Behind the Fan-Powered Shirt Revealed

Read More

Previous Post

தனது இறந்த குட்டியின் மீது தாய் டொல்பினின் அளவு கடந்த அன்பு : வைரலாகும் காணொளி

Next Post

24 சட்டவிரோத சூதாட்ட இணையதளங்களுக்கு இலங்கையில் அதிரடித் தடை! – Sri Lanka Tamil News

Next Post
24 சட்டவிரோத சூதாட்ட இணையதளங்களுக்கு இலங்கையில் அதிரடித் தடை! – Sri Lanka Tamil News

24 சட்டவிரோத சூதாட்ட இணையதளங்களுக்கு இலங்கையில் அதிரடித் தடை! - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin