• Login
Monday, September 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சட்டென உயர்ந்த பிட்காயின்.. சந்தை மொத்தமாக மாறுது.. மக்களே உஷார்..! | Crypto Market Cap Hits $2.8 Trillion: Bitcoin Surges 5% Past $85K Amid Middle East War Fears and Safe-Haven Buying

GenevaTimes by GenevaTimes
September 21, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
சட்டென உயர்ந்த பிட்காயின்.. சந்தை மொத்தமாக மாறுது.. மக்களே உஷார்..! | Crypto Market Cap Hits $2.8 Trillion: Bitcoin Surges 5% Past $85K Amid Middle East War Fears and Safe-Haven Buying
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சட்டென உயர்ந்த பிட்காயின்.. சந்தை மொத்தமாக மாறுது.. மக்களே உஷார்..!

உலகின் நாணயமாக மாறும் என எதிர்பார்க்கப்பட்ட கிரிப்டோகரன்சி, தொடர்ந்து உலக நாடுகளின் கட்டுப்பாடு, தடைகள் காரணமாகப் பெரிய அளவில் பயன்படுத்தப்படாமல் ஒரு சிறிய முதலீட்டுச் சந்தை வட்டத்திற்குள்ளேயே சுற்றி வருகிறது. ஆனால் எப்போதெல்லாம் முதலீட்டு சந்தையும், நாணய மதிப்பும் குறைகிறதோ அப்போதெல்லாம் கிரிப்டோகரன்சி சந்தை முக்கியத்துவம் பெறுகிறது.

அந்த வகையில் தற்போது சந்தையில் உருவாகியுள்ள தடுமாற்றத்தின் காரணமாக பிட்காயின் 8 மாத உயர்வை இன்றைய வர்த்தகத்தில் தொட்டு உள்ளது, ஜனவரி மாதத்திற்குப் பின்பு பிட்காயின் மதிப்பு 85000 டாலரை முதல் முறையாகத் தொட்டு உள்ளது.

சட்டென உயர்ந்த பிட்காயின்.. சந்தை மொத்தமாக மாறுது.. மக்களே உஷார்..!

போர் அச்சம் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் பிட்காயின் மதிப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் இன்று அமெரிக்க வர்த்தக சந்தை திறந்த பின்பு 5.1 சதவீதம் அதிகரித்து 85,222 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.இதன் மூலம் பிட்காயின் சந்தை மதிப்பு கடந்த 24 மணிநேரத்தில் 5.33 சதவீதம் அதிகரித்து 1.7 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

இன்று பிட்காயின் மட்டும் அல்லாமல் பெரும்பாலான கிரிப்டோகரன்சி மதிப்பு உயர்ந்ததால், மொத்த கிரிப்டோ சந்தையின் மதிப்பு 2.8 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது, இதுவும் ஜனவரி மாதத்திற்குப் பின்பு அதிகப்படியான அளவாகும். பிட்காயின் போலவே எதிரியம் 4.3 சதவீதமும், டெதர் 0.01 சதவீதமும், பினான்ஸ் காயின் 5.53 சதவீதமும், ரிப்பிள் 8.12 சதவீதமும், சோலானோ 7.8 சதவீதமும் உயர்ந்துள்ளது.

அமெரிக்காவின் 100 சதவீத வரி விவகாரம் தலையெடுக்கும் முன்பு அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் சீனா அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் சந்திக்க உள்ளனர், இதேபோல் அடுத்த சில நாட்களில் டிரம்ப், ஈரான் பிரதமரையும் சந்திக்க உள்ளார்.

இதனால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது, இதன் எதிரொலியாகப் பத்திர சந்தையும், பங்குச்சந்தையும் உயர்வு பாதையில் உள்ளது. ஆனால் அமெரிக்கா மீண்டும் ஈரான் மீதும், சவுதிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஹவுதி படைகள் மீதும் தாக்குதல் நடத்துவதற்கு தயாராகி வருகிறது.

இதனால் முதலீட்டாளர்கள் தொடர்ந்து பாதுகாப்பான முதலீட்டைத் தேடி வருவதால் பிட்காயின் உட்பட அனைத்து கிரிப்டோகரன்சியும் இன்று உயர்ந்துள்ளது.

இந்தியாவில் தற்போது பல கிரிப்டோ முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டைப் பணமாக்கும் முறையைக் கண்டறிந்த காரணத்தால் கிரிப்டோ சந்தையில் தொடர்ந்து முதலீடுகள் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் கிரிப்டோ முதலீட்டுக்கு அதிக வரி, அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், தடை செய்யப்படாத காரணத்தால் பல தளங்கள் இன்னும் பிட்காயின் முதலீட்டுக்கான கதவுகளை திறந்து வைத்துள்ளது.

மேலும் கிரிப்டோ முதலீட்டாளர்கள், லாபத்தைப் பணமாக எடுக்காமல் கிப்ட் கார்டு, கூப்பன் ஆக எடுக்கும் திட்டத்தைச் செயல்படுத்தும் காரணத்தால் தொடர்ந்து கிரிப்டோ மீதான புழக்கம் அதிகரித்து வருகிறது.

Share This Article

English summary

Crypto Market Cap Hits $2.8 Trillion: Bitcoin Surges 5% Past $85K Amid Middle East War Fears and Safe-Haven Buying

Crypto Market Cap Hits $2.8 Trillion: Bitcoin Surges 5% Past $85K Amid Middle East War Fears and Safe-Haven Buying — சட்டென உயர்ந்த பிட்காயின்.. சந்தை மொத்தமாக மாறுது.. மக்களே உஷார்..!

Story first published: Monday, September 21, 2026, 19:33 [IST]

Other articles published on Sep 21, 2026

Read More

Previous Post

முஸ்லீம் வாக்குகள் யாருக்கு போனாலும் வெல்வது பாஜக தான்.. உபியில் சிக்கலாகும் இஸ்லாமியர் வாக்குகள் | AIMIM Asaduddin Owaisi Offers Opposition Alliance in Uttar Pradesh Ahead of 2027 Assembly Polls

Next Post

ஒரு நபர் நீளமான கத்தியை பயன்படுத்தி வெறித்தனமாக தாக்குதல் நடத்தி, தனது சகோதரியின் மகளை ஆற்றில் வீசினார் – Malaysiakini

Next Post

ஒரு நபர் நீளமான கத்தியை பயன்படுத்தி வெறித்தனமாக தாக்குதல் நடத்தி, தனது சகோதரியின் மகளை ஆற்றில் வீசினார் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin