கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்போது, 454 மில்லியன் ரூபா மதிப்புள்ள கொக்கெய்ன் மற்றும் எக்ஸ்டசி போதைப்பொருட்களுடன் இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யபட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை இன்று (28.10.2026) இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் 46 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சுங்கத் திணைக்களம்
தொழில்முறையில் பொறியியலாளரான குறித்த பயணி, கட்டார் எயார்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான QR 654 என்ற விமானத்தில் பிரான்ஸிலிருந்து தோஹா ஊடாக இலங்கைக்கு வந்துள்ளார்.

விமான நிலையத்தில் மேலதிக சோதனைகளை மேற்கொள்வதற்காக, இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் அவரைத் தடுத்து வைத்துள்ளனர்.
இதன்போது, பயணியின் பயணப் பொதிகளைச் சோதனையிட்டபோது குறித்த போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலதிக பரிசோதனைகளின் பின்னர் அவை கொக்கெய்ன் மற்றும் எக்ஸ்டசி வகை போதைப்பொருட்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

