இந்தியா, தமிழகத்தின் பாம்பன் தெற்குவாடி கடற்கரைப் பகுதியில் இலங்கையர்கள் மூவரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சட்டவிரோதமாகப் படகு மூலம் தமிழகம் சென்ற காரணத்தினாலேயே இக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்குவாடி கடற்கரைப் பகுதியில் வைத்து, இராமேஸ்வரம் கியூ பிரிவு காவல்துறையினர் குறித்த மூவரையும் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
போலி கடவுச்சீட்டு
தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்த குறித்த மூவரும், அங்கிருந்து டெல்லிக்குச் சென்று போலி கடவுச்சீட்டுகளைப் பெற்று, அதன் மூலம் இலண்டன் செல்லத் திட்டமிட்டிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி, இலங்கையர்களைச் சட்டவிரோதமாகப் படகு மூலம் தமிழகத்துக்கு அழைத்து செல்வதற்காக 01 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

