கோலாலம்பூர்:
முன்னாள் ராணுவத் தளபதி டான் ஸ்ரீ முகமது ஹபிசுதீன் ஜந்தனின் (Tan Sri Muhammad Hafizuddeain Jantan) மனைவி, சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் கிடைத்த RM5,000 பணத்தைப் பெற்றதாக இன்று கோலா திரெங்கானு செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
சல்வானி அன்வார் @ கமாருதீன் (Salwani Anuar @ Kamaruddin), வயது 27 என்பவருக்கு எதிராக, கடந்த ஆண்டு (ஜனவரி 16, 2025) கெர்தே (Kerteh) பகுதியில் உள்ள ஒரு வங்கி கிளையில், தனது வங்கி கணக்கில் சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் வந்த RM5,000 பணத்தைப் பெற்றதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நீதிபதி முகமட் அசார் ஒஸ்மான் முன்னிலையில் இந்த குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட சல்வானி அன்வார், தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து, விசாரணை கோரியுள்ளார் (Plead not guilty). “நான் குற்றமற்றவர், இதனை நீதிமன்றத்தில் எதிர்கொள்ள விரும்புகிறேன்” என்று அவர் தெரிவித்தார்.




