Last Updated:
சட்டவிரோதமாக குடியேறுபவர்களை தடுப்பதற்காக தங்கள் நாட்டு எல்லைப் பகுதியில் பிரமாண்ட சுவர் அமைக்கும் பணியை சிலி அரசு தொடங்கியுள்ளது.
சட்டவிரோதமாக குடியேறுபவர்களை தடுப்பதற்காக தங்கள் நாட்டு எல்லைப் பகுதியில் பிரமாண்ட சுவர் அமைக்கும் பணியை தொடங்கியுள்ளது சிலி நாட்டு அரசு.
தென் அமெரிக்க நாடான சிலி, பெருவுடன் 180 கிலோமீட்டர் எல்லையையும், பொலிவியாவுடன் 900 கிலோமீட்டர் எல்லையையும் பகிர்ந்து கொண்டுள்ளது. ராணுவப் படைகள் நிறுத்தப்பட்டிருந்தாலும், இரு பகுதிகளில் இருந்தும் சிலி நாட்டிற்குள் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேர் சட்டவிரோதமாக ஊடுருவியிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது சிலி நாட்டின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்நிலையில், சட்டவிரோதமாக குடியேறுபவர்களை தடுப்பதற்காக தங்கள் நாட்டு எல்லைப் பகுதியில் பிரமாண்ட சுவர் அமைக்கும் பணியை சிலி அரசு தொடங்கியுள்ளது.
சிலி
பெரு நாட்டின் எல்லையோரத்தில் அமைந்துள்ள அரிகா நகரில் எல்லைச் சுவர் அமைக்கும் திட்டத்தை சிலி அதிபர் ஜோஸ் அன்டோனியோ காஸ்ட் (Jose Antonio Kast) தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து இயந்திரங்கள் மூலம் அகழிகள் தோண்டும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த தடுப்புச் சுவர் மூலம் சட்டவிரோத குடியேற்றங்கள் குறைவதுடன், போதைப் பொருள் கடத்தல் தடுக்கப்படும் என்று அதிபர் ஜோஸ் அன்டோனியோ காஸ்ட் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க எல்லைப் பகுதியில் பிரமாண்ட சுவர் அமைக்கும் சிலி அரசு!


