குஜராத்தின் கட்சு மாவட்டத்தில் இருநாட்டு எல்லையைக் கடந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்.
அம்மாநிலத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை அமைந்துள்ள கட்சு மாவட்டத்தில் நேற்று (ஜன.12) பாதுகாப்புப் படையினர் காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்குள்ள ஹராமி நாலா எனும் நீர்நிலையின் வடக்குப் பகுதி வழியாக இந்தியாவிற்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நபரை பிடித்து பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
இதையும் படிக்க: பள்ளிக்கூடத்தில் கண்ணாடிப் பலகை உடைந்து விழுந்து 2 மாணவர்கள் காயம்!

