Tamil Live Breaking News: நியூஸ்18 தமிழ்நாடு செய்திகள் நேரலை
அதிமுக உறுப்பினர் வெளிநடப்பு – ஈபிஎஸ் விளக்கம்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் அருந்தி மரணம் அடைந்தது குறித்து எதிர்க்கட்சி என்ற முறையில், மக்களுக்கு நிதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் மக்களின் பிரச்சினையை சட்டமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்ற அடிப்படையில் நாங்கள் பேச அனுமதி கேட்டோம். ஆனால் சட்டப்பேரவை தலைவர் அனுமதி மறுத்துவிட்டார் என்பதால் வெளிநடப்பு செய்தோம் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்.
அதிமுக வெளிநடப்பு
கேள்வி நேரத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று அதிமுக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், அதனை சபாநாயகர் நிராகரித்ததால், அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு.
அதிமுகவினர் இன்றும் அமளி
கேள்வி நேரத்தை ஒத்திவைக்க வேண்டும் என அதிமுகவினர் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்றும் கருப்புச்சட்டை அணிந்து அவைக்கு வந்த ஈபிஎஸ்
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்றும் கருப்புச் சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை புரிந்துள்ளார்.
தொடங்கியது சட்டப்பேரவை
சட்டப்பேரவை மானியக்கோரிக்கைக்கான விவாதம் தொடங்கியது.
நீட் தேர்வு – 24ஆம் தேதி நடக்கவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு
நீட் தேர்வுக்கு எதிராக, திமுக மாணவர் அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வரும் 24ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு என மாணவர் அணிச் செயலாளர் எழிலரசன் அறிவிப்பு
Tamil Live Breaking News: அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழை
தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை திருநெல்வேலி, தென்காசி,கன்னியாகுமாரி, கோயம்புத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Tamil Live Breaking News: கள்ளக்குறிச்சி விவகாரம்: இதுவரை பாதிக்கப்பட்டவர்கள், இறந்தவர்களின் விவரம்
சேலம்
சிகிச்சை = 31
இறப்பு : 17
கள்ளக்குறிச்சி
சிகிச்சை = 81
இறப்பு : 30
புதுச்சேரி ஜிப்மர்
சிகிச்சை = 17
இறப்பு : 3
விழுப்புரம்
சிகிச்சை = 2
இறப்பு : 4
இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்தம் : 185
இதில் உயிரிழந்தவர்கள் மொத்தம் : 54
தற்போது சிகிக்சைசையில் உள்ளவர்கள் : 131
Tamil Live Breaking News: கள்ளக்குறிச்சி விவகாரம்: பலி எண்ணிக்கை 54ஆக உயர்வு
கள்ளக்குறிச்சி கருணாகுளம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்றவந்தவர்களில் சேலம் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் ஒருவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. இதனால் பலி எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி நேயர்களுக்கு காலை வணக்கம். இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்.
- First Published :
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)