புல்மோட்டை 01 இலுப்பையடி சந்தியைச் சேர்ந்த செய்லாப்தீன் முபாரக் (56வயது) என்பவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. புடவைகட்டு -சாகரபுர பகுதியில் ஜனாஸா நேற்று (28) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் தந்தையும் மகனும் ஆற்றில் மீன் பிடிப்பதற்காக சென்றபோது யான் ஓயா ஆற்றில் நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் நேற்றைய தினம் புடவைக்கட்டு சாகரபுர எனும் இடத்தில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அன்னார் இர்ஷாத் ஆசிரியர், சாஜித் ஆசிரியர், சாக்கிர் ஆகியோரின் அன்பு தந்தையும் நஜீம் (Irrigation) என்பவருடைய அருமை மாமனாரும் ஆவார்.
The post சடலம் மீட்பு appeared first on Thinakaran.
