Last Updated:
பெரும்பாலான போட்டிகளில் தோனி ‘இம்பாக்ட் பிளேயராக’ மட்டுமே விளையாட இந்த மாற்றம் வழிவகுக்கலாம்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை வாங்குவதற்கு சென்னை அணி ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை அவர் சென்னை அணிக்கு வந்தால் பின்வரும் மாற்றங்கள் ஏற்படலாம்.
தோனியின் நீண்ட கால வாரிசாக அதாவது விக்கெட் கீப்பர் + கேப்டனாக சஞ்சு சாம்சனைத் தயார் செய்யும் நோக்கில் சிஎஸ்கே அவரை அணியில் சேர்க்க அதிக ஆர்வம் காட்டுகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸின் கேப்டனாக சாம்சன் இருந்த அனுபவம், தோனிக்குப் பிறகு கேப்டன் பொறுப்பை ஏற்க அவருக்குச் சாதகமாக இருக்கும். ருதுராஜ் கெய்க்வாட் எதிர்பார்த்த அளவுக்குச் செயல்படாத நிலையில் இது சிஎஸ்கே-வுக்கு முக்கியமாகத் தெரிகிறது.
சாம்சனின் வருகையால், தோனி விக்கெட் கீப்பிங் பணியிலிருந்து விலகி, தனது உடற்தகுதியைப் பேணலாம். அவர் வழிகாட்டுதல் மற்றும் வியூகம் அமைப்பதில் மட்டும் கவனம் செலுத்தலாம்.
பெரும்பாலான போட்டிகளில் தோனி ‘இம்பாக்ட் பிளேயராக’ மட்டுமே விளையாட இந்த மாற்றம் வழிவகுக்கலாம். சாம்சனின் வருகை ஐபிஎல் 2026-ஐ தோனியின் கடைசி சீசனாக ஆக்கக்கூடும். சிஎஸ்கே இதுவரை ஒரு வலுவான வாரிசு திட்டத்தை அதாவது தோனிக்கு அடுத்து யார் என்பதை கண்டறியாததால் தோனி தொடர்ந்து விளையாட வேண்டியிருந்தது.
தோனி இந்த சீசனில் சாம்சனுக்கு வழிகாட்டியாக செயல்படுவார். சாம்சனின் அனுபவத்தைக் கருத்தில் கொண்டு, ஒரு சீசன் வழிகாட்டுதலுக்குப் பிறகு அவர் அடுத்த சீசனில் தோனியை முழுமையாக மாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
November 10, 2025 6:34 PM IST


