இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் பயிற்சியாளர் ரமாகாந்த் அச்ரோக்கரின் நினைவிட திறப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில், சச்சின் பங்கேற்றார். அந்த நிகழ்வில் அவரது நண்பரை சந்தித்த வீடியோவும், அந்த நண்பரின் உடல்நிலை குறித்தான பேச்சும் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.
ஒரு காலத்தில் திறமையான கிரிக்கெட் விளையாட்டு வீரராக அறியப்பட்ட வினோத் காம்ப்ளி தான் சச்சீனின் அந்த நண்பர். இவரின் அதிகப்படியான குடிப்பழக்கம், பல வியாதிகள், முறையற்ற வாழ்க்கை முறை உள்ளிட்டவை அவரை கிரிக்கெட்டிலிருந்து படிப்படியாக விலக்கியது.
பார்க்க 75 வயது தோற்றத்துடன் இருக்கும் காம்ப்ளி, நீண்ட நாளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துவருகிறார். அவரது இந்த உடல்நலக் குறைவுக்கு முக்கிய காரணம் அவரின் குடிப்பழக்கம்.
காம்ப்ளிக்கு நோயெலா லூயிஸ் என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. ஆனால், திருமணத்திற்கு பிறகு, முன்னாள் மாடல் அழகி ஆண்ட்ரியா ஹெவிட்டுடன் காம்ப்ளிக்கு திருமணத்துக்குப் புறம்பான தொடர்பு இருந்தது. இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து அவரது திருமணம் முறிந்தது. பின்னர் ஆண்ட்ரியா ஹெவிட் என்பவரை காம்ப்ளி மணந்தார். இவர்களுக்கு 2010ல் ஒரு மகன் பிறந்தார். ஆனால் இந்த திருமணம் கூட அவரை நன்றாக வைத்திருக்க முடியவில்லை. காம்ப்ளி விரக்தியில் மூழ்கத் தொடங்கினார். அதன் பிறகு அவருக்கு குடிப்பழக்கம் அதிகரிக்க ஆரம்பித்தது.
இதயக் கோளாறு மற்றும், மனச்சோர்வு பிரச்சனை எதிர்கொண்டு வரும் காம்ப்ளிக்கு தற்போது அவரின் சிகிச்சைக்குக் கூட பணம் இல்லாத சூழல் இருந்து வருகிறது. ஒரு காலத்தில், பல்வேறு பிராண்டுகள் அவரை விளம்பரத்திற்காக வேலைக்கு அமர்த்த ஆர்வமாக இருந்தன. சில வருடங்களுக்கு முன்பு கூட காம்ப்ளியின் நிதி நிலைமை அவ்வளவு மோசமாக இல்லை.
குடிப்பழக்கத்தால் வினோத் காம்ப்ளியின் மொத்த வாழ்க்கையும் பாழாகிவிட்டது. முன்னாள் கிரிக்கெட் வீரர் விக்கி லால்பானிக்கு அளித்த பேட்டியில், காம்ப்ளி கூறியதாவது: ஒருமுறை சிறுநீர் தொற்று காரணமாக மருத்துவமனையில் நீண்ட நேரம் தங்க வேண்டியிருந்தது. அப்போது அவருக்கு தலைசுற்றல், வாந்தி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டது. அப்போது இரண்டு முறை மயங்கி விழுந்ததாகவும் காம்ப்ளி கூறினார். அதன் பிறகு அவரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டியதாயிற்று. அப்போது அஜய் ஜடேஜா தன்னை சந்திக்க வந்ததாகவும் காம்ப்ளி கூறினார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)