Last Updated:
2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் சிறிது காலம் தோனி பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய ராணுவத்தில் பொறுப்பு வகிக்கக்கூடிய விளையாட்டு வீரர்கள் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். விளையாட்டு துறையில் வீரர்கள் சாதனைகளை ஏற்படுத்தி நாட்டிற்கு பெருமை சேர்க்கின்றனர்.
அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக மத்திய அரசு காவல்துறை, ராணுவம் உள்ளிட்ட படை பிரிவுகளில் கௌரவ பொறுப்பை வழங்கி விளையாட்டு வீரர்களை கௌரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சச்சின், தோனி உள்ளிட்ட நாட்டிற்கு பெருமை சேர்த்த வீரர்கள் இந்திய ராணுவத்தில் கௌரவ பொறுப்புகளை வகித்து வருகிறார்கள்.
முதன்முதலாக இந்திய கிரிக்கெட் அணியின் முதல் டெஸ்ட் கேப்டன் சி.கே. நாயுடுவுக்கு இந்திய ராணுவத்தில் கௌரவ பொறுப்பு வழங்கப்பட்டது. அவர் 1923 ஆம் ஆண்டு கர்னல் பொறுப்பை இந்திய ராணுவத்தில் பெற்றார். அடுத்ததாக முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஹேமு அதிகாரிக்கு இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் என்ற பொறுப்பு வழங்கப்பட்டது.
கிரிக்கெட்டில் ஏராளமான சாதனைகளை நிகழ்த்தி நாட்டிற்கு சச்சின் டெண்டுல்கர் பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக 2010 ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் குரூப் கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்திய கிரிக்கெட் அணிக்கு முதன்முறையாக உலக கோப்பையை வென்று கொடுத்த கபில்தேவ் இராணுவத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளார். 2008 ஆம் ஆண்டு அவருக்கு லெப்டினன்ட் கர்னல் பொறுப்பு ராணுவத்தில் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணிக்கு டி20, ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை தொடர்களில் கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் எம். எஸ். தோனி, ராணுவத்தில் பொறுப்பு வகித்து வருகிறார். 2011 ஆம் ஆண்டு அவர் ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் பொறுப்பு வழங்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் சிறிது காலம் தோனி பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.


