• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சச்சின் மகள் சாரா டெண்டுல்கருக்கு புதிய பொறுப்பு… ரூ.1140 கோடி திட்டத்தில் முக்கிய ரோல்! | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
August 5, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
சச்சின் மகள் சாரா டெண்டுல்கருக்கு புதிய பொறுப்பு… ரூ.1140 கோடி திட்டத்தில் முக்கிய ரோல்! | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


‘கிரிக்கெட்டின் கடவுள்’, ‘லிட்டில் மாஸ்டர்’ என்று அன்போடு அழைக்கப்படும் முன்னாள் இந்திய கிரிக்கெட் நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் பற்றி கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி சாதாரண பொதுமக்களுக்கும் தெரிந்திருக்கும். தனது தந்தையைப் போல் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் ஆர்வம் காட்டவில்லை என்றாலும், நவீன வாழ்க்கை முறை மற்றும் ஃபேஷனுக்காக அடிக்கடி செய்திகளில் இடம் பெறுகிறார் சாரா டெண்டுல்கர்.

தற்போது 27 வயதாகும் சாரா, 130 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ. 1140 கோடி) மதிப்புள்ள பிரச்சாரத்தில் பங்கேற்க உள்ளார். தங்கள் நாட்டின் சுற்றுலாவை உலகளவில் பிரபலப்படுத்தும் விதமாக Come and Say G Day என்ற பெயரில் புதிய பிரச்சாரத்தை ஆஸ்திரேலிய அரசு கொண்டு வந்துள்ளது. இதன் இந்திய முகமாக சாரா நியமிக்கப்பட்டுள்ளார். உலகளாவிய சுற்றுலா பயணிகள் தங்கள் அடுத்த விடுமுறை பயணத்திற்கு ஆஸ்திரேலியாவைத் தேர்ந்தெடுக்க ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபலங்கள் இதில் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பட்டியலில் இந்தியாவுக்கான விளம்பரத் தூதராக சாரா டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரச்சாரம் எப்போது தொடங்குகிறது?: ஆகஸ்ட் 7-ம் தேதி முதலில் சீனாவில் பிரச்சாரம் வெளியிடப்படும். பின்னர் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பிற முக்கிய சந்தைகளில் படிப்படியாக வெளியிடப்படும். Come and Say G’day பிரச்சாரத்தின் இரண்டாவது கட்டமான இது, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதன்முதலில் இந்த பிரச்சாரம் அக்டோபர் 2022-ல் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரச்சாரத்தின் அதிகாரப்பூர்வ சின்னம்?: இந்தப் பிரச்சாரத்தின் பிராண்ட் தூதராகவும் அதிகாரப்பூர்வ சின்னமாகவும் ஆஸ்திரேலியா ‘ரூபி தி ரூ’ என்பதை தேர்வு செய்துள்ளது. இந்த ‘ரூபி தி ரூ’ முதன்முதலில் மைக்கேல் கிரேசி இயக்கிய “ஜி’டே” என்ற குறும்படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அனிமேஷன் கேரக்டர். ஆஸ்திரேலிய நடிகை ரோஸ் பைர்ன் குரல் கொடுத்த ரூபி, குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு கடையில் இருந்த ஒரு கங்காரு பொம்மை. ‘ரூபி தி ரூ’ சின்னம் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் உள்ள பிரச்சாரத்திற்காக பயன்படுத்தப்பட இருக்கிறது.

இதற்கிடையே, இந்தியாவில் இந்த பிரச்சாரத்துக்கான தூதராக சச்சின் மகள் சாரா டெண்டுல்கர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்தியாவில், தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகங்கள் மூலம் ஆஸ்திரேலியாவின் சுற்றுலா குறித்தவற்றை பிரச்சாரம் செய்யும் பொறுப்பை சாரா ஏற்றுக்கொண்டுள்ளார். இதுகுறித்து ஆஸ்திரேலிய சுற்றுலா நிர்வாக இயக்குனர் பிலிப்பா ஹாரிசன் அதிகாரபூர்வமாக அறிவித்து, “சாரா டெண்டுல்கர், இந்திய பயணிகளுக்கான Come and Say G-day பிரச்சாரத்தில் இடம்பெறுவார்” என்று தெரிவித்தார்.

யாரெல்லாம் இந்தப் பிரச்சாரத்தில் இணைந்துள்ளார்கள்?: இந்த பிரச்சாரத்தில் அமெரிக்காவின் வனவிலங்கு பாதுகாவலர் மற்றும் மறைந்த ஸ்டீவ் இர்வின் மகனான ராபர்ட் இர்வின் இடம்பெற்றுள்ளார். இவரை தவிர, இங்கிலாந்தின் புகழ்பெற்ற உணவுப் பிரபலமான நிஜெல்லா லாசன், சீனாவைச் சேர்ந்த நடிகர் யோஷ் யூ, ஜப்பானைச் சேர்ந்த நகைச்சுவை நடிகர் அபரேரு-குன், ஆஸ்திரேலிய நடிகர் தாமஸ் வெதரால் ஆகியோர் இணைந்துள்ளனர்.

Read More

Previous Post

“உண்மையான இந்தியர் யார் என்பதை நீதிமன்றம் தீர்மானிக்க முடியாது” – பிரியங்கா காந்தி எம்பி | இந்தியா

Next Post

4.08 கோடி போலி எல்பிஜி சிலிண்டர் இணைப்புகள் நீக்கம்: மத்திய அமைச்சர் தகவல் | Over 4 Crore Duplicate LPG Connections Deactivated to Curb Misuse: Petroleum Minister Hardeep S Puri

Next Post
4.08 கோடி போலி எல்பிஜி சிலிண்டர் இணைப்புகள் நீக்கம்: மத்திய அமைச்சர் தகவல் | Over 4 Crore Duplicate LPG Connections Deactivated to Curb Misuse: Petroleum Minister Hardeep S Puri

4.08 கோடி போலி எல்பிஜி சிலிண்டர் இணைப்புகள் நீக்கம்: மத்திய அமைச்சர் தகவல் | Over 4 Crore Duplicate LPG Connections Deactivated to Curb Misuse: Petroleum Minister Hardeep S Puri

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin