• Login
Tuesday, February 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சச்சின் டெண்டுல்கர் சாதனையை நெருங்கிவிட்ட ஜோ ரூட்… | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
January 5, 2026
in மலேசியா
Reading Time: 3 mins read
0
சச்சின் டெண்டுல்கர் சாதனையை நெருங்கிவிட்ட ஜோ ரூட்… | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் பிரம்மாண்ட சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு இங்கிலாந்து ஜாம்பவான் ஜோ ரூட்டிற்கு அமைந்துள்ளது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ஜோ ரூட், தனது 67வது அரை  சதத்தை நிறைவு செய்து அசத்தி இருக்கிறார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை எட்டிப்பிடிப்பது என்பதே பல வீரர்களுக்கு மிகப்பெரிய கனவாக இருக்கும். ஏனென்றால் 24 ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடியுள்ள சச்சின் டெண்டுல்கர், 200 டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்கள், 68 அரைசதங்கள் உட்பட 15,921 ரன்களை விளாசி இருக்கிறார்.

இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை எட்டிப்பிடிக்க இங்கிலாந்து ஜாம்பவான் ஜோ ரூட்டுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதன்பின் வந்த கிராலி 16 ரன்களிலும், பென் டக்கெட் 27 ரன்களிலும், பெத்தல் 10 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதன்பின் ஜோ ரூட் – ஹாரி ப்ரூக் கூட்டணி இணைந்தது. சிறப்பாக ஆடிய ஜோ ரூ5ட் 103 பந்துகளில் 8 பவுண்டரிகள் உட்பட 72 ரன்களை விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் அடிக்கும் 67வது அரைசதம் இதுவாகும்.

இதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அரைசதங்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் ஜோ ரூட் 2வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். இதன் மூலமாக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் ஷிவ்நரைன் சந்தர்பால் சாதனையை முறியடித்திருக்கிறார். சச்சினின் 68 அரைசதங்கள் சாதனையை சமன் செய்ய, இன்னும் ஒரேயொரு அரைசதம் அடித்தாலே போதுமானது.

Previous articleஒற்றுமைஅரசாங்கத்திலிருந்து மலாக்கா ஜசெக விலகும் முடிவை கட்சியே தீர்மானிக்கும் – கூ போய் தியோங்
Puvaneswary ThoppasamyPuvaneswary Thoppasamy



Read More

Previous Post

அடுத்த 4 ஆண்டுகளில் இந்த 5 உலோகங்கள் தான் ‘டாப்’.. ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்? | வணிகம்

Next Post

உலக நீதிபதியாக செயற்படும் எந்த நாட்டையும் ஏற்கமாட்டோம் : அமெரிக்காவிற்கு சீனா பதிலடி

Next Post
உலக நீதிபதியாக செயற்படும் எந்த நாட்டையும் ஏற்கமாட்டோம் : அமெரிக்காவிற்கு சீனா பதிலடி

உலக நீதிபதியாக செயற்படும் எந்த நாட்டையும் ஏற்கமாட்டோம் : அமெரிக்காவிற்கு சீனா பதிலடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin