• Login
Monday, July 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சச்சின் சாதனை க்ளோஸ்.. 15 வயதில் தொடர் நாயகன் விருது.. சாதனைக்கு மேல் சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி! | Vaibhav Sooryavanshi: Vaibhav Sooryavanshi becomes the youngest Indian cricketer to get the POTM Award

GenevaTimes by GenevaTimes
July 26, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
சச்சின் சாதனை க்ளோஸ்.. 15 வயதில் தொடர் நாயகன் விருது.. சாதனைக்கு மேல் சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி! | Vaibhav Sooryavanshi: Vaibhav Sooryavanshi becomes the youngest Indian cricketer to get the POTM Award
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Cricket

oi-Yogeshwaran Moorthi

Time
Published: Sunday, July 26, 2026, 22:51 [IST]

ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்ற நிலையில், ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை கைப்பற்றி வைபவ் சூர்யவன்ஷி புதிய வரலாறு படைத்துள்ளார். சிறிய வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இரு விருதுகளையும் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்திருக்கிறார்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்களை எடுத்தது. சிறப்பாக ஆடிய வைபவ் சூர்யவன்ஷி 49 பந்துகளில் 81 ரன்களை எடுத்து அசத்தினார்.

Vaibhav Sooryavanshi

இதன்பின் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்திய அணி சார்பாக மயங்க் யாதவ் 4 ஓவர்களில் 29 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன் மூலமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்திய டி20 அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் பொறுப்பேற்ற பின் முதல்முறையாக தொடரை வென்றுள்ளார். அதனால் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இது எமோஷனல் மொமண்ட்டாக அமைந்தது. அதேபோல் இந்தப் போட்டியின் ஆட்டநாயகன் விருதை வைபவ் சூர்யவன்ஷி கைப்பற்றினார். அதுமட்டுமல்லாமல் 3 இன்னிங்ஸில் வைபவ் சூர்யவன்ஷி 2 அரைசதங்கள் உட்பட 151 ரன்களை விளாசி இருக்கிறார்.

இதனால் தொடர் நாயகன் விருதையும் வைபவ் சூர்யவன்ஷி கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இதன் மூலமாக மிக இளம் வயதில் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்ற வீரர் என்ற வரலாற்றை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார். இதனால் வரும் நாட்களில் வைபவ் சூர்யவன்ஷி அடிக்கும் ஒவ்வொரு ரன்னும் சாதனையாகவே இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.

English summary

Vaibhav Sooryavanshi: Vaibhav Sooryavanshi becomes the youngest Indian cricketer to get the POTM Award

Read More

Previous Post

ஈரானுக்கு நெதன்யாகு விடுத்த கடுமையான எச்சரிக்கை!

Next Post

உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர்… அனகத் சிங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து | Makkal Osai

Next Post
உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர்… அனகத் சிங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து | Makkal Osai

உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர்... அனகத் சிங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin