இதற்கிடையில், புகார் அளிக்கப்பட்ட காவல் நிலையத்தின் ஏ.சி.பி சுகன்யா சர்மா, “தீப்தியின் சகோதரர் சுமித் சர்மா, புகாருடன் சதர் காவல் நிலையத்தை அணுகினார். முதற்கட்டமாக, புகாரில் சில உண்மைகளைக் கண்டறிந்து, பிஎன்எஸ் பிரிவுகள் 305 (ஏ) (திருட்டு), 331 (3) (வீட்டை உடைத்தல்), 316 (2) (குற்றவியல் நம்பிக்கை மோசடி) மற்றும் 352 (அமைதியை மீறும் நோக்கத்துடன் ஒருவரை அவமதித்தல்) ஆகியவற்றின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தோம்” என்றார்.

