288 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட மகாராஷ்ட்ராவில் வரும் 20 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், ஆளும் மகாயுதி கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக, துலே என்ற இடத்தில் பிரதமர் மோடி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “தலித், பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முன்னேறும் போது காங்கிரஸால் பொறுத்துகொள்ள முடியாது.
சமூகங்கள் பல்வேறு சாதிகளாகப் பிரிந்து, பலவீனமடைய வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். நாட்டின் அனைத்து பழங்குடி சமூகங்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்துவதே காங்கிரஸின் செயல்திட்டம். மதக் குழுக்களுடன் காங்கிரஸ் இந்த சதியை முயற்சித்தபோது, அது நாட்டைப் பிரிப்பதற்கு வழிவகுத்தது. இப்போது காங்கிரஸ், பட்டியலின, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர்களை, ஒருவருக்கொருவர் எதிராகத் தூண்டி வருகிறது. இந்தியாவிற்கு பெரிய சதி வேறு எதுவும் இருக்க முடியாது. நீங்கள் ஒற்றுமையாக இருக்கும் வரை நீங்கள் வலுவாக இருப்பீர்கள்.
ஒரு சாதியை இன்னொரு சாதிக்கு எதிராக நிறுத்தும் ஆபத்தான விளையாட்டை காங்கிரஸ் ஆடுகிறது. இதுதான் காங்கிரஸின் வரலாறு. காங்கிரஸ் எப்போதும், பட்டியலின- பழங்குடியின மக்கள் பலவீனமாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறது. மகா விகாஸ் (காங்கிரஸ்) கூட்டணி கட்சிகள் சக்கரங்களும் பிரேக்கும் இல்லாத வாகனம். அவர்கள் அனைவரும் ஓட்டுநர் இருக்கையில் அமரவே போராடுகிறார்கள்.
மகாராஷ்டிரா மக்கள் எனக்கு முழு மனதுடன் ஆதரவு தருகிறார்கள். மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி மட்டுமே நல்லாட்சி வழங்கும்.
மகா விகாஸ் அகாடி கூட்டணி, பெண்களை இழிவுப்படுத்துகிறது. ஒவ்வொரு பெண்களும், இந்தியா கூட்டணி கட்சியினரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அடுத்த 5 ஆண்டுகள் மகாராஷ்டிராவின் முன்னேற்றத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும்.
இதையும் படியுங்கள் :
தவெக? திமுக? கூட்டணி குறித்து அதிரடியாக தெரிவித்த திருமாவளவன்!
ஜம்மு காஷ்மீரில் யார் நினைத்தாலும், அம்மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370 ஆவது சட்டப் பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது” என்று பேசினார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
