Last Updated:
சித்தார்த் ராய் தனது சகோதரியின் திருமணத்தில் காஜிபூர் மாவட்டம் முழுவதிலிருந்தும் பிச்சைக்காரர்கள் மற்றும் வீடற்றவர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து சமூக ஊடகங்களில் பாராட்டைப் பெற்றார்.
உத்தரபிரதேசத்தின் காஜிபூர் மாவட்டத்தைச் சேர்ந்த சித்தார்த் ராய் என்ற நபர் தனது சகோதரியின் திருமணத்தை தனித்துவமான முறையில் கொண்டாடி மறக்க முடியாததாக மாற்றினார். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக ஆடம்பரமாகவும், மில்லியன் கணக்கான ரூபாய் செலவாகவும் நடைபெறும் இந்திய திருமணங்களுக்கு மத்தியில், சித்தார்த்தின் மனிதாபிமான செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதாவது, உத்தரபிரதேசத்தின் காசிபூரில் ஒரு நபர், தனது சகோதரியின் திருமணத்திற்கு உறவினர்கள் மற்றும் நண்பர்களை மட்டும் அழைக்கவில்லை, மாறாக மாவட்டம் முழுவதிலுமிருந்து பிச்சைக்காரர்கள் மற்றும் வீடற்றவர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார். தனது சகோதரியின் திருமணத்தை மறக்கமுடியாததாக மாற்ற சித்தார்த், இந்த தனித்துவமான காரியத்தைச் செய்தார்.
திருமணத்திற்கு பிச்சைக்காரர்களையும் தெருவோர வியாபாரிகளையும் அழைத்து வர சித்தார்த் கார்களை முன்பதிவு செய்திருந்தார். இந்த விஷயத்தில் அவரது குடும்பத்தினரும் சித்தார்த்துக்கு ஆதரவளித்தனர். கார்களில் அழைத்து வரப்பட்ட பிச்சைக்காரர்கள் அன்புடன் வரவேற்கப்பட்டு, குடும்ப உறுப்பினர்களுடன் அமர வைக்கப்பட்டனர். அனைவருக்கும் சுவையான உணவு பரிமாறப்பட்டது.
இசை, நடனம் உள்ளிட்ட திருமண விழாக்களில் பங்கேற்க அவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர். எந்த நேரத்திலும் அவர்கள் வித்தியாசமாகவோ அல்லது வெளியாட்களைப் போலவோ உணரவில்லை. திருமண மண்டபத்தில் சிறப்பு விருந்தினர்கள், குடும்ப உறுப்பினர்களைப் போலவே அவர்களும் கௌரவிக்கப்பட்டனர், மேலும் சுவையான உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுபோன்ற மரியாதையை அனுபவிப்பது இதுவே முதல் முறை என்று திருமணத்திற்கு வந்த பல விருந்தினர்கள் தெரிவித்தனர். திருமணத்திற்குப் பிறகு, சித்தார்த் அனைவருக்கும் ‘ரிட்டர்ன் கிஃப்ட்’ கொடுத்து மரியாதையுடன் விடைபெற்றார்.
यूपी – जिला गाजीपुर के सिद्धार्थ राय ने अपनी बहन की शादी में स्पेशल मेहमान बुलाए। वो थे भीख मांगकर गुजारा करने वाले। गाड़ियों से इन्हें शादी में लाया गया, लजीज व्यंजन परोसे गए, फिर विदाई भी दी गई। pic.twitter.com/MJkvxtNqZL
— Sachin Gupta (@SachinGuptaUP) December 22, 2025
சித்தார்த் ராய் இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டு, மாவட்டத்தின் பிச்சைக்காரர்களை தலைமை விருந்தினர்களாக அழைப்பதை விட பெரிய ஆசீர்வாதம் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியதை அடுத்து, மில்லியன் கணக்கான நெட்டிசன்கள் இந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, சித்தார்த்தின் மனிதாபமான செயலுக்கு பாராட்டு தெரிவித்தனர். அதில் ஒரு யூசர், இது வெறும் திருமணம் அல்ல, இது சமூகத்திற்கு ஒரு நல்ல பாடம், என்று கூறியுள்ளார்.
மற்றொரு யூசர், நீங்கள் உண்மையிலேயே பாராட்டுக்கு தகுதியானவர், என்று கூறியுள்ளார். இன்னொரு யூசர், என்ன ஒரு பெரிய முயற்சி, என்று பாராட்டினார். சித்தார்த் பாயின் நடவடிக்கை மிகவும் பாராட்டத்தக்கது மற்றும் மனிதாபிமானம் நிறைந்தது, என்று யூசர் ஒருவர் கூறியுள்ளார். உண்மையான நோக்கத்துடன் இதை செய்திருந்தால், உங்களுக்கு ஒரு பெரிய கைதட்டல் என்று கூறியுள்ளார்.


