புக்கிட் மேராவில் உள்ள அடுக்குமாடி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 வயது நிறைந்த இருவர் உயிரி ழந்தனர்.
நேற்று (ஆக.13) மாலை 4 மணியளவில், ஜாலான் புக்கிட் மேராவில் உள்ள பிளாக் 106இல் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) கூறியது.
சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாடு… புதுக்கோட்டையை சேர்ந்த இருவர் கைது
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், நான்காவது மாடியில் எரிந்து கொண்டிருந்த வீட்டில் தீயை அணைக்க நீரை பீச்சியடிக்கும் ஜெட் கருவியை பயன்படுத்தினர்.
அப்போது இருவர் சமையலறையில் சிக்கி இருப்பதையும் தீயணைப்பு வீரர்கள் கண்டனர்.
Video: https://www.instagram.com/p/DNUnPrVvgP1/
இதை அடுத்து, மயக்க நிலையில் இருந்த இருவரும் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர், ஆனால் அவர்கள் இறந்ததாக அங்கு செல்லப்பட்டுள்ளது.
இதில் 34 வயதுமிக்க ஆணும் 32 வயதுமிக்க பெண்ணும் இறந்ததாகவும், முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த சம்பவத்தில் எந்த சதிச்செயல் சந்தேகமும் இல்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
அருகிலுள்ள வீடுகளை சேர்ந்த மேலும் இரண்டு பேர் அதே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட புளாக்கில் இருந்து சுமார் 60 பேர் வெளியேற்றப்பட்டனர்.
காவல்துறை விசாரணைகள் தொடர்கின்றன.
இறந்த நபரின் நண்பர் கொடுத்த தகவல்
இறந்த நபரின் நண்பர் ஒருவர் கூறுகையில், உயிரிழந்த இருவரும் ஜன்னல் வழியாக உதவி வேண்டி கதறியதைக் கண்டதாகக் கூறினார்.
மலாய் மொழியில் அந்த பெண், ‘சகோதரரே, எங்களை காப்பாத்துங்க!’ என்று சத்தம் போட்டார்,” என்று அவர் கூறினார்.
பின்னர் அவர்களுக்கு உதவ தனது புளாக்கில் இருந்து அவர் ஓடிச் சென்றதாகவும், SCDF வந்து கொண்டிருப்பதாகவும் அவர் அவர்களிடம் கூறினார்.
பின்னர் ஸ்ட்ரெச்சர்களிலிருந்து அவர்களை வெளியே கொண்டு வந்தபோது, அவர்களின் உடைகள் மற்றும் உடல்கள் எ*ரிந்த நிலையில் இருப்பதை அவர் கண்டதாக சொன்னார்.
“ஒரு நண்பராக, என்னால் அவர்களைக் காப்பாற்ற எதுவும் செய்ய முடியவில்லை என்பது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது” என்று புலம்பினார் அவர்.
Photo: SCDF/FB & nangkhamkaow6/TikTok
வேலைவாய்ப்பு, சிங்கப்பூர் வட்டார செய்திகளை உடனே தெரிந்துகொள்ள Facebook, Instagram, Twitter, ShareChat மற்றும் Telegram பக்கங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

