பங்குனி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு திதியும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவே திகழ்கிறது. அந்த வகையில் பங்குனி மாதத்தில் வரக்கூடிய திங்கட்கிழமை மிகவும் விசேஷமான சோமவாரமாக கருதப்படுகிறது. பொதுவாகவே திங்கட்கிழமை அன்று நாம் சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும். அப்படி செய்வதன் மூலம் தெளிவான மனநிலை உண்டாகும் என்று கூறப்படுகிறது. பங்குனி மாதத்தில் வரக்கூடிய திங்கட்கிழமை அன்று நாம் சிவபெருமானை வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய மனம் தெளிவு பெறுவதோடு மட்டுமல்லாமல் நாம் செய்யக்கூடிய அனைத்து காரியங்களிலும் வெற்றிகள் உண்டாக்கும்.
இந்த வழிபாட்டை ராகு காலம், எமகண்ட வேளை தவிர்த்து மீதம் இருக்கக்கூடிய எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம். ஆலயத்திற்கு சென்று செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.
வீட்டிலேயே இந்த வழிபாட்டை செய்துவிடலாம். கண்டிப்பான முறையில் அனைவரின் இல்லங்களிலும் சிவபெருமானின் லிங்கம் அல்லது சிலை அல்லது படம் இருக்கும். பங்குனி மாதத்தில் வரக்கூடிய திங்கட்கிழமை அன்று வீட்டில் இருக்கக்கூடிய சிவபெருமானுக்கு வில்வ இலைகளால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். வில்வ இலைகளால் மாலை கட்டி சாற்றி விடுங்கள்.
பிறகு தங்கள் வீட்டில் செய்த ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக சிவபெருமானுக்கு வைக்க வேண்டும். பிறகு சிவபெருமானுக்கு முன்பாக ஐந்து அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு வடக்கு அல்லது கிழக்கு பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும். பிறகு சிவபெருமானுக்குரிய இந்த ஒரு மந்திரத்தை 108 முறை கூறி சிவபெருமானை நாம் வழிபாடு செய்ய வேண்டும். இப்படி இந்த மந்திரத்தை கூறி நாம் வழிபாடு செய்வதன் மூலம் சிவபெருமானின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று மனம் தெளிவடைவதோடு நாம் இருக்கக்கூடிய காரியங்கள் அனைத்திலும் வெற்றிகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது.
மந்திரம்:
“ஓம் சிவ சிவ சிவாய நம ஓம்”