கோவையிலிருந்து சிங்கப்பூருக்கு இயக்கப்படும் விமான சேவை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூரில் இருந்து “இண்டிகோ” (Indigo) மற்றும் பட்ஜெட் விமானமான “ஸ்கூட்” (Scoot) ஆகியவை சிங்கப்பூருக்கு இயக்கப்படுகின்றன.
வெளிநாட்டு ஊழியர்களான 7 தமிழர்களுக்கும் குவிந்துகொண்டே இருக்கும் அன்பளிப்பு & விருதுகள்
இந்த நிலையில், இண்டிகோ விமான நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இண்டிகோ விமான நேரம் மாற்றம்
அதாவது கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு திங்கள், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு விமானம் இயக்கப்படும்.
மேலும் சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் சிங்கப்பூர் நேரப்படி அதிகாலை 4 மணிக்கு விமானம் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய மாற்றம் வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து நடப்புக்கு வரும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
சிங்கப்பூரில் தூங்கி ஓய்வெடுக்க S$3000 சம்பளம்: “சும்மா இருந்தா போதும்” – உடனே விண்ணப்பியுங்கள்!

