உலக வரலாற்றில் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு மிக முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியது. சுமார் 2 ஆண்டுகளாக உலக நாடுகள் பெரும்பாலும் முடங்கி போயிருந்தன. உயிரிழப்புகளுடன் பொருளாதார வாழ்வாதார இழப்புகளையும் இந்த கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ் ஏற்படுத்தியது.
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு தடுப்பூசி ஏதும் முன்பு கண்டுபிடிக்கப்படாத நிலையில், வைரஸ் பரவலுக்கு ஓராண்டுக்கு பிறகு தடுப்பு ஊசிகள் உலகம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டன. இவற்றில் பெரும்பாலான தடுப்பூசிகளை இந்தியா தயாரித்து உலக நாடுகளுக்கு வழங்கியது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் இந்தியாவில் பெரும்பாலானவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு நல்ல பலன் கிடைத்த நிலையில் தற்போது அந்த ஊசிகளால் பக்க விளைவுகள் ஏற்படும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக கோவிஷீல்ட் தடுப்பூசி ரத்தம் உறைதலுக்கு காரணமாக இருக்கும் என்று தகவல்கள் வெளிவந்தன. இதன் அடிப்படையில் அதன் உற்பத்தி நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்டு தடுப்பூசிகளை திரும்ப பெற்று வந்தது.
அதே நேரம் கோவாக்சின் தடுப்பூசியை செலுத்தி கொண்டவர்கள் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக கருதி வந்தனர். இந்நிலையில் கோவாக்கின் தொடர்பாக பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் சமீபத்தில் ஆய்வு நடத்தியது. இதில் கோவாக்ஸின் எடுத்துக் கொண்டவர்களுக்கு சுவாச குழாய் தொற்று, தோல் பிரச்சனைகள், நரம்பு மண்டல கோளாறுகள் உள்ளிட்டவை ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் எந்த தடுப்பூசி அதிக பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறித்த விவாதங்கள் இணையத்தில் ஏற்பட்டுள்ளன.
இதற்கு டெல்லி டாக்டர் அம்பேத்கர் உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் பக்க விளைவுகள் முற்றிலும் வேறுபட்டவை, அதே வழியில் அவை வெவ்வேறு முறைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. மற்ற தடுப்பூசிகளைப் போலவே கோவிஷீல்டிலும் பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது, ஆனால் அதை விட அஸ்ட்ராஜெனெகா நிறுவனமே அதன் பக்க விளைவுகளை ஏற்றுக்கொண்டது.
இப்போது கோவிஷீல்ட் அறிமுகப்படுத்தப்பட்டு இவ்வளவு காலம் கடந்துவிட்டதால், இந்திய மக்களுக்கு ஆபத்து இல்லை. மீதமுள்ள விதிவிலக்குகள் எந்த மருந்திலும் நிகழலாம். கோவாக்சின் தொடர்பாக இரண்டு அம்சங்கள் உள்ளன. முதலாவதாக, இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பல தடுப்பூசிகள் இன்னும் இந்தியாவில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
இரண்டாவது அறிவியல் உண்மை என்னவென்றால், கோவாக்சின் மருந்தை மக்களுக்கு செலுத்தும் போது, அதன் பிறகு மக்கள் ஒமிக்ரான் அல்லது கொரோனா JN.1 போன்ற மாறுபாடுகளால் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.
தடுப்பூசியை எடுத்துக் கொண்ட பிறகும் இந்தியாவில் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஏனெனில் இந்த தடுப்பூசிகள் அனைத்தும் தொற்று நோயைத் தடுக்காது. அவை மரணத்தைத் தடுக்கின்றன. தடுப்பூசி போட்ட பிறகும் தொற்று ஏற்படலாம். எனவே இந்த தடுப்பூசிகள் குறித்து மக்கள் இப்போது பீதி அடையத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
