ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலையை 100 ரூபாயினால் குறைக்க இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இவ்வாறு விலையை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக கோழி இறைச்சி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி அதிகரிக்கும் பட்சத்தில் வாடிக்கையாளர்களுக்கும் அதே அனுகூலத்தை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட உற்பத்தியாளர்கள் இணக்கம் வெளியிட்டனர்.
இலங்கையில் கோழி இறைச்சியின் வருடாந்த தனிநபர் நுகர்வு 11 கிலோகிராமாகவும், முட்டையின் வருடாந்த தனிநபர் நுகர்வு 138 கிலோகிராமாகவும், அதிகரித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02
|

