• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

கோழி இறைச்சிக்கான மானியம் நிறுத்தப்பட்டபோதிலும், சந்தை விலை நிலையானதாகவே உள்ளது – துணை அமைச்சர் விளக்கம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
August 6, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
கோழி இறைச்சிக்கான மானியம் நிறுத்தப்பட்டபோதிலும், சந்தை விலை நிலையானதாகவே உள்ளது – துணை அமைச்சர் விளக்கம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்,

கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி தொடங்கி கோழி இறைச்சிக்கான மானியம் நிறுத்தப்பட்டபோதிலும், சந்தை விலை நிலையானதாகவே உள்ளது என உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின துணை அமைச்சர் டத்தோ டாக்டர் புஸியா சாலே இன்று மக்களவையில் தெரிவித்தார்.

அரசாங்கம் மானியத்தை நிறைவு செய்ததற்குப் பிறகும், கோழி விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், கடந்த காலங்களில் சந்தை பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருந்ததாகவும் அவர் கூறினார்.

“கோழி உற்பத்தி செலவின் 70% தீவனச் செலவாகும். எனவே, தீவன விலை நிர்ணயத்தில் ஆதிக்கம் செலுத்தும் குழுக்களை ஒடுக்குவதும் நாங்கள் எடுத்த முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாகும்,” என்று அவர் விளக்கினார்.

2023 நவம்பர் 1ஆம் தேதியிலிருந்து, கோழி விலையைத் தொடர்புடைய அமைச்சு தினசரி கண்காணிக்கத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் விலை நிலை தெளிவாக பதிவாகி வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

“தற்போது மானியம் வழங்கப்படவில்லை என்றாலும், முழுமையான வழங்கல் சங்கிலியை நாங்கள் கண்காணித்து, விலையைச் சமநிலைப்படுத்தி வருகிறோம். இதன் விளைவாக, சில பகுதிகளில் விலை கூட குறைந்துள்ளது,” என துணை அமைச்சர் தெரிவித்தார்.

NACCOL கண்காணிப்பு: தேசிய வாழ்க்கைச் செலவு நடவடிக்கை மன்றம் (NACCOL) ஊடாக வாழ்க்கைச் செலவினம் குறைத்தலைக் கண்காணிக்கும் முயற்சி தொடர்ந்து நடைமுறையில் உள்ளதாகவும், இதன் பயன்கள் பொதுமக்களிடம் நேரடியாக சென்று கொண்டிருப்பதையும் அவர் வலியுறுத்தினார்.

இந்த விடயத்தில், சுங்கை பட்டாணி தொகுதியைச் சேர்ந்த ஹராப்பான் உறுப்பினர் டாக்டர் முகமது தவ்பிக் ஜோஹாரி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், துணை அமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.



Read More

Previous Post

Moon Mission 2035: சீனாவின் உதவியுடன் நிலவில் தரையிறங்க தயாராகும் பாகிஸ்தான்! | pakistan eyes moon mission landing 2035 with help from china

Next Post

2 டபுள் டெக்கர் பேருந்துகள், கார் மோதல்: “முதல் நாள் வேலைக்கு வந்த கார் ஓட்டுநர்” – 13 பேர் மருத்துவமனையில்…

Next Post
2 டபுள் டெக்கர் பேருந்துகள், கார் மோதல்: “முதல் நாள் வேலைக்கு வந்த கார் ஓட்டுநர்” – 13 பேர் மருத்துவமனையில்…

2 டபுள் டெக்கர் பேருந்துகள், கார் மோதல்: "முதல் நாள் வேலைக்கு வந்த கார் ஓட்டுநர்" - 13 பேர் மருத்துவமனையில்…

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin