Last Updated:
ஜோ ரோசன்பெர்க் பெட்டலுமா கோழிப் பண்ணையில் 4 கோழிகளை மீட்டதால், 5 ஆண்டுகள் சிறை தண்டனை எதிர்கொள்வதற்கான வழக்கு அமெரிக்காவில் நடைபெறுகிறது.
அமெரிக்காவில் கோழிகள் மீது கொண்ட அன்பால் கல்லூரி மாணவி ஒருவர், 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவரின் மகளான 23 வயது ஜோ ரோசன்பெர்க், சுமார் 40 ஏக்கரில் பூனை, நாய் என வளர்ப்பு விலங்குகளுக்கு மத்தியில் வளர்ந்தவர். இதனால், விலங்கு நல ஆர்வலராக பணியாற்றி வந்த ரோசன்பெர்க், கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம், சான் பிரான்சிஸ்கோவிற்கு அருகே உள்ள பெட்டலுமா கோழிப் பண்ணைக்கு தனது நண்பர்களுடன் சென்றிருந்தார்.
அங்கு பண்ணை ஊழியர் போல் வேடமிட்டு உள்ளே நுழைந்த ரோசன்பெர்க், லாரியில் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான கோழிகளில் இருந்து 4 கோழிகளை மட்டும் வாளிகளில் மறைத்து வெளியே எடுத்து வந்தார்.
பின்னர், அவற்றிற்கு பெயர் வைத்த ரோசன்பெர்க், பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். அதில் கோழிகள், வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டுள்ளதும் காயங்கள் மற்றும் சிராய்ப்புகளால் அவதிப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டினார். இது கோழி பண்ணைகளுக்கு எதிராக எதிர்ப்பு குரலை கிளப்பியது.
இதற்கிடையே, கோழி பண்ணைக்குள் புகுந்து திருடியதாக ரோசன்பெர்க் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
October 30, 2025 11:05 AM IST


