இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் மெகா ஏலத்தை முன்னிட்டு ஒவ்வொரு அணிகளும் வீரர்களை தக்க வைத்துக கொண்டும், விடுவித்தும் உள்ளன. அந்த வகையில் இன்று ஒவ்வொரு அணிகளால் ரிடென்ஷன் செய்யப்பட்ட வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
எதிர்பார்த்தவாறு, சென்னை அணியில் தோனி, ருதுராஜ், ஜடேஜா, சிவம் துபே மற்றும் பதிரனா ஆகியோர் தக்க வைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இதேபோன்று ஒவ்வொரு அணியும் 2 முதல் 6 வீரர்கள் வரை ரிடென்ஷன் செய்திருக்கிறது.
அதிக தொகைக்கு ரிடென்ஷன் செய்யப்பட்டவர்கள் லிஸ்ட்டில் ஐதராபாத் அணியின் சிக்சர் மன்னன் ஹெய்ன்ரிச் கிளாசன் முதலிடத்தில் இருக்கிறார். இவரை அந்த அணி ரூ. 23 கோடி வழங்கி ரிடென்ஷன் செய்துள்ளது.
அடுத்த இடத்தில் ரூ. 21 மதிப்பில் ரிடென்ஷன் செய்யப்பட்ட விராட் கோலி உள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் ரிடென்ஷன் செய்யப்பட்ட விராட் கோலி வரும் சீசனில் அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் நிகோலஸ் பூரன் ரூ. 21 கோடிக்கு தக்க வைக்கப்பட்டுள்ளார். இதேபோன்று, சன்ரைசர்ஸ் அணியின் பேட் கம்மின்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், குஜராத் அணியின் ரஷித் கான், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜஸ்பிரித் பும்ரா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருதுராஜ் கெய்க்வாட், ரவிந்திர ஜடேஜா ஆகியோர் தலா ரூ. 18 கோடிக்கு ரிடென்ஷன் செய்யப்பட்டுள்ளனர்
இதேபோன்று, அதிர்ச்சி தரும் வகையில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ஃபாஃப் டூப்ளசிஸ் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.
.
&w=750&resize=750,375&ssl=1)
