கோலாலம்பூரில் LRT ரயில் தண்டவாளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அதன் சேவை சில மணி நேரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இது PWTC LRT நிலையத்துக்கு அருகே நடந்தது.
இந்த சம்பவம் ஜூலை 4-ஆம் தேதி(இன்று) 9.58 மணியளவில் நேர்ந்ததாக New Strait Times வெளியிட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறை விரைந்தனர்.
தண்டவாளத்தில் உள்ள ஒரு பகுதியில் சிறிய தீப்பொறி மூண்டதை காணலாம். மேலும் அங்கிருந்து புகை கிளம்புவதை வீடியோவில் காணலாம்.
அதனால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பயணிகளுக்காக ஏதுவாக மாற்று ரயில் சேவையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் சத்தம் கேட்டதாகவும் கூறப்பட்டது.
தண்டவாளத்தில் ஏற்பட்ட பிரச்சனை பழுதுபார்க்கப்பட்டது. அதன் பின் LRT சேவை வழக்க நிலைக்கு திரும்பியது.
Follow us on : click here
The post கோலாலம்பூரில் ரயில் தண்டவாளத்தில் தீ!! appeared first on SG Tamilan.
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin