கோலாலம்பூர்:
கோலாலம்பூரிலிருந்து பெட்டாலிங் ஜெயா நோக்கிச் செல்லும் பெடரல் நெடுஞ்சாலையில், ஜாலான் காசிங், ஜாலான் தீமூருக்கு வெளி யேறும் சாலைக்கு இடையில் தீ சம்பவம் நிகழ்ந்தது.
இது அங்கிருந்த பெயர்ப்பலகை பகுதியில் ஏற்பட்டிருந்ததாக நம்பப்படுகிறது.
அப்பகுதியிலிருந்து பெருமளவான கரும்புகை வந்ததையும், மக்கள் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு, அதனை பார்த்துக்கொண்டிருந்ததையும் காண முடிந்தது.
இச்சம்பவம் தொடர்பில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை முழுமையான அறிக்கை வெளியிட்ட பின்னர், இது பற்றிய மேலதிக விவரங்கள் தெரிவிக்கப்படும்.
The post கோலாலம்பூரிலிருந்து பெட்டாலிங் ஜெயா நோக்கிச் செல்லும் பெடரல் நெடுஞ்சாலையில் தீ! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

