தென்மேற்கில் உள்ள சல்மா கிறிஸ்தவ தேவாலயம், மெக்சிகோவில் உள்ள கிறிஸ்தவ மக்களுக்கு முக்கிய புனித தளங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த ஆலயத்திற்கு புனித யாத்திரையாக மத்திய மெக்சிகோ குவானாஜுவாடோ மாநிலத்தில் இருந்து அப்பகுதி மக்கள் குழுவாக பேருந்தில் சென்றனர்.
அவர்கள் சென்ற பேருந்தானது, மெக்சிகோவின் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் விபத்துக்குள்ளாகியது. இதில் சம்பவ இடத்திலேயே 14 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிக்க: அமெரிக்காவில் கோர விபத்து : இந்தியாவைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சோகம்
விபத்து குறித்து தகவல் அறிந்த உள்ளூர் மெக்சிகன் பாதுகாப்பு செயலகம், உடனடியாக மருத்துவ குழு மற்றும் மீட்பு படையினரை அனுப்பியது. தற்போது வரை இந்த விபத்தில்14 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 31 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்திற்கான காரணம் குறித்து மெக்சிகன் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
