• Login
Sunday, April 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கோர விபத்தில் சிக்கிய பாஜக வேட்பாளர்… பிரசாரம் முடிந்து வீடு திரும்பும்போது மேற்குவங்கத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 5, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
கோர விபத்தில் சிக்கிய பாஜக வேட்பாளர்… பிரசாரம் முடிந்து வீடு திரும்பும்போது மேற்குவங்கத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 05, 2026 3:37 PM IST

பாஜக வேட்பாளர் சாவித்ரி பிரசாரம் முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது அவரது கார் கோர விபத்தில் சிக்கி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News18
News18

மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவிவருகிறது.

இரண்டு கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து, தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், பாஜக பெண் வேட்பாளர் கோரமான விபத்தில் சிக்கியிருக்கிறார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்கம் மாநிலம், கூச் பெஹார் மாவட்டம், ஷீதல்குச்சி சட்டமன்றத் தொகுதி பாஜக வேட்பாளராக சாவித்ரி பர்மன் அறிவிக்கப்பட்டு, அவர் களத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார். அந்த வகையில் அவர், மதாபங்கா எனும் பகுதியில் தனது பிரசாரத்தை மேற்கொண்டுவிட்டு, தனது காரில் வீட்டிற்கு இரவு திரும்பிக்கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில், ஷிகார்பூர் எனும் கிராமத்தின் அருகே வந்துகொண்டிருந்தபோது, சாலையின் எதிர்புறத்தில் வந்துகொண்டிருந்த லாரி ஒன்று, அவரது காரின் மீது மோதும்படி வந்துள்ளது. அதில் இருந்து தப்பிக்க டிரைவர் காரை திருப்பியபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகே இருந்த கால்வாயில் கவிழ்ந்துள்ளது.

இது கார் பலத்த சேதம் அடைந்த நிலையில், கார் ஓட்டுநரும், காருக்குள் இருந்த பாஜக வேட்பாளர் சாவித்ரி பர்மனுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை மீட்ட கட்சியினர், அவரையும், ஓட்டுநரையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது அங்கு அவர்கள் சிகிச்சையில் இருந்துவருகின்றனர்.

இந்த விபத்து குறித்து பேசிய வேட்பாளர் சாவித்ரி பர்மன், “எதிர்திசையில் இருந்து அதிவேகமாக வந்த ஒரு லாரி திடீரென எங்கள் காருக்கு முன்னால் வந்தது. ஓட்டுநர் அதைத் தவிர்க்க முயன்றபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் விழுந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

அதே சமயம், இந்த விபத்து குறித்து பேசும் அவரது ஆதரவாளர்களும், கட்சியினரும், இது திட்டமிட்ட சதியோ எனும் கேள்வியும், அச்சமும் எழுவதாக தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து மதாபங்கா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணைக்குப் பிறகே விபத்துக்கான காரணம் தெரியவரும் என காவல்துறை தரப்பில் இருந்து சொல்லப்பட்டுள்ளது.

தமிழ் செய்திகள்/இந்தியா/

கோர விபத்தில் சிக்கிய பாஜக வேட்பாளர்… பிரசாரம் முடிந்து வீடு திரும்பும்போது மேற்குவங்கத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Read More

Previous Post

4 மாடி கட்டடம் இடிந்து விபத்து – 3 பேர் பலி, அதிர்ச்சியில் மக்கள்! – Sri Lanka Tamil News

Next Post

Sameer Rizvi : நடப்பு தொடரில் ஆரஞ்சு தொப்பி… 2024ல் சிஎஸ்கே அணியில் சமீர் ரிஸ்வி எத்தனை ரன்கள் எடுத்திருந்தார் தெரியுமா?

Next Post
Sameer Rizvi : நடப்பு தொடரில் ஆரஞ்சு தொப்பி… 2024ல் சிஎஸ்கே அணியில் சமீர் ரிஸ்வி எத்தனை ரன்கள் எடுத்திருந்தார் தெரியுமா?

Sameer Rizvi : நடப்பு தொடரில் ஆரஞ்சு தொப்பி... 2024ல் சிஎஸ்கே அணியில் சமீர் ரிஸ்வி எத்தனை ரன்கள் எடுத்திருந்தார் தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin