உத்தரபிரதேசத்தில் கோயிலுக்குள் பக்தர்கள் பக்தியுடன் தீர்த்தம் என நினைத்துக் குடிப்பது ஏ.சியில் இருந்து வெளியேறும் தண்ணீரைத் தான்.
பிருந்தாவனம் பகுதியில் பங்கி பிஹாரி என்ற கிருஷ்ணர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பக்தர்கள் சிலர் திடீரென தேநீர் கோப்பைகளை கையில் ஏந்தி யானை முகம் கொண்ட கோயிலின் வெளிப்புற அமைப்பில் இருந்து வெளியேறிய தண்ணீரை பிடித்துக் குடித்தனர். ஒருவர் பின் ஒருவராக இதனை தொடர்ந்த நிலையில் அவ்வழியாக சென்ற கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் குடிப்பது தீர்த்தம் அல்ல ஏசி தண்ணீர் என்று விளக்கினர்.
#JUSTIN உத்தரபிரதேசத்தில் தீர்த்தம் என நினைத்து
ஏசியிலிருந்து வடியும் தண்ணீரைக் குடித்த மக்கள்#UttarPradesh #Mathura #Temple #ACWater #News18Tamilnadu https://t.co/1V8D6J3Adq pic.twitter.com/Kax4G0dUpl— News18 Tamil Nadu (@News18TamilNadu) November 4, 2024
இந்த சம்பவம் தொடர்பான காட்சி இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏ.சியில் இருந்து வெளியேறும் தண்ணீரை குடிப்பதால் உடல்நலம் பாதிக்கப்படும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இதையும் படிங்க: 600 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்து… 36 பேர் உயிரிழந்த சோகம்!
கோயில் நிர்வாகம், பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பலகை வைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
.
- First Published :
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)